இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 06)

0
1177
 *பகுதி 06*
 
அப்படி அவள் அவனது சேட்டிற்கு நோகாமல் அடித்ததை ரசித்துக் கொண்டிருந்த ராஜேஷ்
“போதும் டீ….. நீ இப்படி அடிக்கிறத பாத்து பைல் அழப்போகுது. விடு போதும். சரி உன் ஹஸ்பன்ட் இப்படி இனிப்பான செய்தி சொல்லிகிட்டு இருக்கன் சீக்கிரம் போய் ஏதாவது ஸ்வீட்டா எடுத்துட்டு வா” என அன்புக்கட்டளையிட்டான் அவன்.
 
அவள் “ஸ்வீட்டாவா……”
 என்று சொல்லிய படி சமையலறைப் பக்கம் சென்றாள். பின் ஒரு டீ ஸ்பூன்ட் சக்கரையுடன் வந்து சிறு இலேசான சிரிப்புடனும் சிறு தயக்கத்துடனும் அவனிடம் கொடுத்தாள். தன் மனைவி ஏன் இப்படி தயங்குகிறாள்? ஏதும் வில்லங்கம் இருக்குமோ!  என்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டாலும் எதுவாயினும் இதை ருசித்துக்கொண்டே ரசிப்போம் என்றுகூறி அதனை அவன் தன் வாயிலில் போட்டு மெள்ளும் போது அவன் முகமே மாறி விட்டது. 
 
உடனே ஆஹா! என் மனைவியும் சளைத்தவளில்லை நாம போட்ட ட்ராமாவுக்கு சிறந்த பரிசினைத் தந்திருக்கிறாள் என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு அதை கஷ்டப்பட்டு மென்று முழுங்கினான். ஆனால் அதை எதனையுமே வெளியில் காட்டாது சிரித்துக் கொண்டே சுவைக்கும் தன் கணவனை ஒரு வித அன்பு கொண்ட பார்வையில் பார்த்தாள் பவித்ரா
 
[ அது சரி  அவள் கொடுத்த சக்கரையை ஏன் அவ்வளவு கட்ஷப்பட்டு மென்று முழுங்கினான்?. ஏன் அவர்கள் வீட்டுச் சக்கரை கசக்குமோ! இல்லை சக்கரை சாப்பிடும் போது இவர்கள் இப்படித்தானா ரியக்ஷ்ன் போடுவாங்களோ! இல்ல ராஜேஷ் போட்ட ட்ராமாவுக்கு சிறந்த பரிசு என்று வேறு சொன்னானே அப்போ பவித்ரா ஏதாவது தில்லாலங்கடி வேல செஞ்சிரிப்பாளோ! ஆனா பவித்ரா அவன் சேட்டுக்குக் கூட நோகாம அடிச்சவளாச்சே அப்படி இருக்கும் போது அவள் தில்லாலங்கடி வேலை செய்வாளா? போன்ற பல கேள்விகள் உங்கள்  கேள்விகளாக இருக்கும் தானே வாசகர்களே! அதுக்குக் காரணம் என்ன என்று அடுத்த பகுதியில் பார்போம்.]
 
தொடரும்…
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments