நட்புக்காக ஓர் கவி

0
2439

உலகில் உள்ள அதிசயங்களில்
உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால்
உன் நட்பும் ஓர் அதிசயமாய்
இருந்திருக்கும் தோழி…

கருவிழி உளி கொண்டு
கரும்பாறை என் மனம் அதில்;
நட்பெனும் சிலை வடித்திட்டாய்
அழகாக ஓர் நாள்..

எப்போதும் திட்டி கொண்டே
இருப்பாய் என்னை ,
நீ தீட்டாத நேரங்களில் எல்லாம்
விக்கி கொண்டே இருக்கும்
என் இதயம் உன் நினைவில்..

நட்பெனும் சொந்தமது
உன் பெயராலும் என்
பெயராலும் இருந்து விட
ஆசை கொள்கின்றன தோழி….

மனதிடம் பூத்திடும் அன்பு
மட்டும் ஏன் பிடித்தவரையே சார்ந்திருக்கிறது?
உன்னுடன் நான் உரையாடும்
அந்த தருணங்கள் போல…

இந்த நட்பெனும் உன்
கர்வம் என்றென்றும் நிலைத்திட வேண்டுகிறேன் வரங்கள்
பல இறைவனிடத்தில்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments