நினைவோ ஒரு பறவை

0
775
FB_IMG_15886111171258382

சில நேரங்களில்
அவள் எனை
மறந்து இருக்கக்கூடும்
என் நினைவுகளையும்

உலகிற்கு இது புதிதல்ல
தவறின்,
இது விதி விலக்கும் அல்ல

சில நேரங்களில்
முடிந்து விட்டதே என
ஆயிரம் அழுகைகள்
சில நேரங்களில்
கடந்து செல்லும்
சிறு புன்னைககள்

இதனிடையே சிறு புழுவாய்
உன்னிடம் பேசி நெடு நாட்கள்
பேசிவிட நினைத்தும்
தயங்கி செல்லும்
என் சிறு கர்வம் நல்லதே

உன் முகப்புத்தகத்தின்
பச்சை வண்ணம்
ஒளிப்பதை தினம் பார்க்கிறேன்
நேரம் கடக்கையில்
இராப்பொழுதுகளில்
அது அணைகின்றது
அது அணையும் தருவாயில்
என் விளக்கும் அணைக்கப்படுகின்றது

என் கனவெனும் நிஜத்தில் மூழ்கின்றேன்

சொல்கிறேன்…..
நான் உன்னோடு தினமும் பயணித்து கொண்டுதான் இருக்கிறேன்.

அதில் நான் மட்டுமே நிஜமாய்
நீ
சிறு காட்சிபிழைகளாய்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments