கல்லூரியும் நானும்…

31
7480

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு

2016ல் உயர்தரத்தை கடந்த நானோ
இறையை இறைஞ்சாத நாட்களில்லை
இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக
நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது

ஆனால் ஏன் கிடைத்தது என
நான் ஏங்கித்தவித்த நாட்களோ அதிகம்
கல்வியின் வாசனை
என்னை விட்டும் விலகிச் சென்ற பின்னரே
கலைக்கூடம் என்னை அழைத்தது
சுமார் இரண்டு வருடங்களின் பின்…..

புனிதமிகுந்த ரமலானின் பல பல
கனவுகளை சுமந்து காலடி பதித்த
என்னை அமோகமாக வரவேற்றது
சீனியரின் கசப்பு சாக்லேட்…..

அன்று முதல் ஆரம்பமானது
வாழ்வின் கறுப்பு நாட்கள்
ஆனால்
இன்று நினைத்தால் கண்ணீர்
வெளிவரும் அளவிற்கு சிரிப்பை
உதிர்கின்றன எனது உதடுகள்….

மொட்டை பர்தாவும்
பொக்கெட் வைத்த அபாயாவும்
ரம்பா ஸ்லீப்பருமாய்
வலம் வந்த நாட்களை
என் வாழ்வில் அவ்வளவு சீக்கிரம்
மறந்து விட முடியாது….

ஓவியம் என்ற பெயரில்
தங்களையே வரைய வைத்து
அசிங்கப்படுத்திய நாட்கள்
அது மட்டுமா? பைல் மட்டையில்
அனைவரின் பெயரையும் எழுதியதுடன்
ஊருக்கோர் பெயர் வைத்தது
அதில் எங்களூரோ மதராசப்பட்டினம்
இவைகளெல்லாம் கல்லூரியின்
சரித்திரத்தில் மீண்டும் மீண்டும்
நினைக்க தூண்டும் நினைவுகளே…..

முதல் வாரம் கலைச்சுற்றூலா
மகிழ்வுடன் என் நண்பர்களுடன்
மட்டு நகரத்தை சுற்றுகையில்
என் மனதும் மட்டற்ற மகிழ்வடைந்தது
உண்மையே…..

பேரூந்திற்கு காத்து நின்ற
அலப்பறைகள் சொல்லொண்ணாதவைகள்
நேரம் தவறி பஸ்ஸை பிடிக்க ஏதோ
ஒலிம்பிக்கில் மெடல் வாங்க விரைந்தது போல்
விரைந்த சரித்திரங்களும்
என் கல்லூரி பக்கத்தில் உள்ளன…

பேரூந்தில்லாமல்
வீதி இருள் சூழ காத்திருந்த
தருணம் அன்று சீனியர் மற்றும்
எங்கள் தோழர்கள்
செய்த உதவியே எங்கள்
சீனியர்-ஜுனியர் மற்றும் சகோதர
உறவை நிலைப்படுத்தியது…

மற்றுமொருநாள் நெரிசல்
தாங்காது இடைவழியில்
இறங்கி ஊருக்கு பாதையாத்திரை
சென்றது ஒரு பெருங்கதை…

உணவே வாழ்வென வாழும்
எமக்கு மெயின் கெண்டீனின்
அனுமதி மறுக்கப்பட்ட அநீதியை
எங்கு போய் சொல்வேனென
என் மனது அங்கலாய்தது
ஒரு தனிக்கதை…..

பாடசாலைகளில் ஆண்துனைகளை
நாடாது பழகிக் கொண்ட எனக்கு
ஆரம்பத்தில் உங்களுடன் பழகுவதில்
ஏற்பட்ட தவிப்பை என்னவென்று
சொல்வேன் பயத்தை விழுங்கி
பேச வந்த தருணங்கள்….

அப்பப்பா இன்று நினைத்தாலும்
ஏதோ இமயத்தை வென்றது போல்
ஒரு உணர்வு உள்மனம் எங்கும்…..

மயங்கி விழுந்த தோழியை
சங்கடம் பார்க்காது மருத்துவரிடம்
அழைத்துச் சென்றது
காப்பாளராய்
எங்களை காத்திருந்தது மட்டுமன்றி
ஊர் சுற்ற உதவியாய் வழி காட்டிய
நீங்கள் அனைவரும் இன்று எங்கள் நண்பர்கள்
இது இறை கிருபை….

விடுதிகளே வாழ்க்கை ஆகிப்போன
காலங்களும் என் கல்லூரி
பக்கத்தில் உள்ளன
பிறந்தநாள் கொண்டாட்டம்
உணவுத்திருவிழா என நான்
களியாட்டம் எடுத்த
நாட்கள் அதிகம்…..

ரிவர்பேங்கை தாஜ்மஹால்
போல் கனவு கோட்டையுடன்
பார்க்கச்சென்ற நாட்களும்
எம் வாழ்வில் மறக்க முடியாதவையே…
தமிழ் மொழியாவே இருந்தாலும்
என் வெளியூர் நண்பர்களின்
புதிரான பேச்சைக்கேட்டு
மதிமயங்கி சிரித்த நாட்கள்…

பல அலப்பரைகளுடனும்
அரைக்கண் தூக்கத்தூடனும்
கழித்த பாடவேளைகளையும்
தமிழ் காற்று வீசுமா என
ஏங்கிய லெக்சஹோலையும் மறக்க முடியுமா……

பாடசாலை காலத்தில்
ஒரு ப்ராஜ்ஜக்ட் செய்ய
மூன்று வருடம் எடுத்துக்கொண்ட
எனக்கு நாளொரு ப்ரஜக்ட்டும்
பொழுதொரு அசைமன்டும் தந்த
கொடுமையை என்னவென்று சொல்ல……

பிரஸன்டெசேன் எனும் பெயரில்
அனைவர் முன்னிலையிலும்
சோளக்காட்டு பொம்மை போல்
நின்ற நாட்களும் ஏராளம்……

செமஸ்டர்,மிட் எக்ஸாம் என
தலையை உடைத்து படித்து
கிழித்து புரியாத சிங்களத்துடன்
நான் புரிந்த யுத்தமும்
ஒரு மூன்றாம் உலக யுத்தமே…..

இறுதியாக அசைமன்ட்காக
செய்த உணவுத்திருவிழா
போர்கோலம் கண்டு இறுதியாக
ஸ்டேடஸ்காக மட்டும் யூஸ் ஆகிய
அலப்பறைகளை யாரிடம் போய்
சொல்வது என திணறித் திரிந்த நாட்கள்…….

ஒருவருடகாலமாய் தாய்போன்று
எம்மை காத்து தந்தை போன்று
எம்மை அரவணைத்த நீர் எமக்கு
கிடைத்த வரமே..
நன்றி கூறி உம்மை தூரப்படுத்த
விரும்பவில்லை,எம் சகோதரர்களே…..

கால ஓட்டங்கள் விரைவானது
இதோ முதல் வருடத்தை கடந்து
விட்டோம் இன்றும் ஒன்றாக
உள்ளோம் …….

இன்னும் நான்கு
வருடங்ளின் பின் சில பல
மூலைகளில் இருப்போம்
இனி இருக்கும் நாட்களே
சொந்தமும் சொர்க்கமும்………

கல்லூரி ஒரு மாயவலை
அதை தினமும் என் கண்களால்
காண்கிறேன்
முடிந்தளவு அன்பினைக் கொடுத்து
அன்பினைப் பெறுவோம்…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
31 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Aji
Aji
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

😍

Binth Anver
Binth Anver
Reply to  Aji
4 years ago

5statable poiem

M.t.a.sathath
M.t.a.sathath
Reply to  Aji
4 years ago

💘இதயத்தை கவருதம்மா உன் வார்த்தைகள்

Jensil khan
Jensil khan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb

Binth Anver
Binth Anver
Reply to  Jensil khan
4 years ago

Ya Superrrb

A.samsuna
A.samsuna
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

Binth Anver
Binth Anver
Reply to  A.samsuna
4 years ago

Ya excellent

Binth Anver
Binth Anver
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமை

Ali.
Ali.
Reply to  Binth Anver
4 years ago

Excellent

A.Nifha
A.Nifha
Reply to  Binth Anver
4 years ago

Fantastic 💜💜💜💜

Ahamed Shukry Abdul Azeez
Ahamed Shukry Abdul Azeez
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது..உன் கவியில் மெய் மறந்து போனேனம்மா!!!…நன்றிகள் கோடி…வாழ்த்துக்கள்

Binth Anver
Binth Anver
Reply to  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

நன்றி

Ali.
Ali.
Reply to  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

Ya I also have to Thank

Ali.
Ali.
Reply to  Ahamed Shukry Abdul Azeez
4 years ago

This is not only remin university life but aslo remin school

Asf. Akeel
Asf. Akeel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb

Fathima Nuzra
Fathima Nuzra
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Ali.
Ali.
Reply to  Fathima Nuzra
4 years ago

Nice

Ali.
Ali.
Reply to  Fathima Nuzra
4 years ago

👍👍❤

Mohamed shazz
Mohamed shazz
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Ijas
Ijas
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Thank you for reminding me of my school’s golden days.

Ali.
Ali.
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Attractive lines

A.Aasir
A.Aasir
Reply to  Ali.
4 years ago

😘👏👏👏

A.Aasir
A.Aasir
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Unn varihal ovvonrum enn manathai kavaruthamma7

A.Nifha
A.Nifha
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Amazing

Faris
Faris
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Really nice

Nizar
Nizar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nicely writing

Ml.Nixaru
Ml.Nixaru
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

கல்லூரி ஒரு மாயவலை அதை உன் கவியில் காண்கான்றேன்👌

Ml.Nizar
Ml.Nizar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உயிரோட்டமுள்ள உணர்வை தட்டிப் பார்க்கும் உன் கவிக்கு நன்றி

Waheed
Waheed
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superr

Jahana
Jahana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good

Jahana
Jahana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superbb