தேடல்

0
935

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்
அன்பின் தேடல் உறவை வளர்க்கும்
வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்
வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும்

தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்
தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்
தேடல் அறிவின் தேவை பெருக்கும்
தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்

தேடல் இல்லா உயிரும் இல்லை
தேடலுக்கு முற்றுப் புள்ளி இல்லை
தேடல் நல்ல திசையில் இருப்பின்
தேவை அதுவோ பலனைச் சேர்க்கும்

குணத்தை இழந்த பணத்தின் தேடல்
குதூகலம் இழந்த வாழ்வின் தேடல்
மனத்தில் ஆசை மிகுந்த தேடல்
மனதில் துன்பம் மலரும் தேடல்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments