எனக்காய் நீ வேண்டும்

1
1158
Girl-Boy-Friends-in-Love-Heart-Touching-Love-Stories

ஆண் என்ற வைராக்கியத்துக்குள்
அதிகாரம் செய்ய நினைக்காமல்
ஆயுள் முழுக்க இறை வழியில்
அன்பு செய்யும் ஆளுமையாளனாய்
நீ வேண்டும்..

என் கடமை அனைத்திலும்
உனக்கும் பங்கு உண்டு என்று
சமையலறையிலும் பங்கு கொள்ளும்
பண்பான பங்காளனாய் நீ வேண்டும்…


என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும்
மாற்றுக் கருத்தின்றி என்
மனதார, மகிழ்வாய் உதவிடும்
மாண்பாளனாய் நீ வேண்டும்…

மண வாழ்க்கை
உன்னோடு தான் தொடங்க இருக்கின்றது
தெரியாது உன் விருப்பு வெறுப்பு
நான் மெதுவாய் உன்னை புரியும் வரை
ஒரு பொறுமையாளனாய் நீ வேண்டும்…

குடும்பத்தில் பிரச்சினைகள்
வாஸ்தபம் தான்
அப்போது எனக்காய்
துணை நிற்கும் துணையாளனாய் நீ வேண்டும்…

தனியாய் என்னை இரவில் தவிக்க விடாது
நேரம் பார்த்து வேலை செய்து
நேரத்திற்கு வீட்டுக்கு வரும்
இல்லாளனாய் நீ வேண்டும்…

தப்பு செய்யும் போது
தாராளமாய் மன்னிப்பு கேட்கும்
தயாளனாய் நீ வேண்டும்
நான் தவறு செய்யும் போது
தர்க்கம் செய்யாத அன்பாளனாய் நீ வேண்டும்…

என் விலக்கான காலங்களில்
என் பருவ மாற்றம் அறிந்து
எனக்காய் சீர் செய்யும்
சிறப்பாளனாய் நீ வேண்டும்…

என் உணர்வை மதித்து
எனக்காய் சேவை செய்யும்
சேவகனாய் நீ வேண்டும்…

உன் கை பிடித்து மறுமை வரை
நடக்க துடிக்கும் உன்
குழந்தை மனைவிக்கு
தாயாய் அரவணைக்கும் ஒரு கணவனாய் நீ வேண்டும்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments