அப்புவும் நானும்

2
890

“எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன “மாங்கனி” “மாங்கனி” என்டு கூப்பிடாதையெண்டு….இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான் கூப்பிடுற மாதிரி இருக்கு….”

“மோன!!!! இஞ்ச பார்…இப்ப எதுக்கு கண்ணக்கசக்கிட்டு நிக்கிற .உந்த பேர வைக்கிறதுக்கு நான் பட்ட பாடு தெரிஞ்சா நீ இப்பிடி கதைக்கமாட்டாய் இங்கிலிசுப்பேர்தான் வைக்கனும் எண்டு கொப்பன் ஒற்றக்கால்ல நிண்டான்.
அது பத்தாதுன்னு ஆச்சி பேரத்தான் உனக்குவைக்கனும் என்டு உன்ர கொம்மா ஒரு பக்கம்…இதெல்லாத்தையும் சமாளிச்சு வீட்டில கூப்பிடுறதுக்கு ஒரு தமிழ் பெயர்தான் வைக்கனும் என்டு யோசிச்சு யோசிச்சு வைச்சதுதான் இந்த பேர்..”மாங்கனி “
பாத்தியா மோன? சொல்லுறப்பவே எவளவு அற்புதமா அம்சமா இருக்குன்னு…..”

“அப்பு அதெல்லாம் எனக்கு தெரியாது…சின்னப்பிள்ளையா இருக்கேக்க கூப்பிட்டனி அது சரி . பெரியபிள்ள ஆகினபிறகு இப்பிடிகூப்பிட எனக்கு வெக்கமா கிடக்கு.  இனிமேல் இப்பிடி கூப்பிட்டா உன்னோட கா… ” அப்புவுக்கு சாப்பாட போட்டுக்கொண்டே சொன்னன்.

 

 

 

 

 

 

தில்லையப்புக்கு வாற மாதத்தோடு தொண்ணூற்றஞ்சு முடிஞ்சுதொண்ணூற்றாறு தொடங்குதுஆனா அப்புவ யாரும் பாத்தா எம்பது வயதுதான் மதிப்பினம்.அந்தகாலத்தில இருந்தே அப்புவுக்கு காலமையில பழையசோறுதான் வேணுமாம். ராத்திரிக்கு ஆச்சி குரக்கன்புட்டும் கத்தரிக்காய் பொரியலும் சுடச்சுடகுடுப்பாவாம்.ஆச்சிட கைப்பக்குவம் இங்க யாருக்குமில்ல என்டு அப்பு அடிக்கடி சொல்லும்.ஆச்சிபோனபிறகு அப்பு குரக்கன்புட்ட தொட்டும்பாக்கிறதில்ல..அப்புவும் ஆச்சியும் அந்தளவுக்கு பாசமான தம்பதி என்டு இப்பையும் ஊருக்குள்ள பேச்சு இருக்கு.

அப்புவும் ஆச்சியும் காதலிச்சுதான் கலியாணம் செய்தவினம்.ஆச்சி வீட்டில ஒத்துக்கொள்ளாததால அப்பு, ஆச்சிய கூட்டிற்றுவந்தமாதிரி தான் கத ..உண்ம பொய் தெரியேல்ல. ஆச்சிக்கு முதல் பிள்ள வயித்தில தங்கினத கேள்விப்பட்டு தாயாக்கள் ஓடி வந்திற்றினம். அதோட எல்லாரும் ஒன்னுக்க ஒன்னாகிற்றம் என்டு அப்பு சொல்லும். காலம்போக போக அப்புவுக்கு நாலு பெடியள் பிறந்திட்டாங்கள். ஆசைக்கு ஒரு பெட்டப்பிள்ள. அவவுக்கு வயசுவந்த உடனையே சொந்தக்காரப்பெடியனுக்கு கட்டி வைச்சாச்சு. நாலு பெடியளும் கலியாணம் செய்து மனிசிபிள்ளையளோட ஊரிலையே இருந்திற்றனம்.அப்புவுக்கு இங்க வயல்காணி இருக்கிறதால அப்பு அத சாட்டி எங்களோடையே இருந்திற்று…

எடிபிள்ள குசினிக்க என்ன செய்யிறாய். இங்க ஒருக்கா வாமோன…எனக்கு நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது புள்ள. ஓடிப்போய் கொப்பர கூட்டியா ஆசுப்பத்திரிவரைக்கும் போகனும் அப்புவின் குரல்தழுதழுத்தது.

எனக்கு வயசுவந்த காலத்தில இருந்து அப்பு ஆசுப்பத்திரி போய் நான் பாத்ததில்லை. காய்சலே வந்தாலும் கைமருந்து செய்துதான் குடிக்கும்.அவங்கள் தாற பரிசிட்டமோலுக்கு இது எவளவோ மேல் என்டு அப்பு சொல்லுறது என்னவே உண்மதான்….

 

 

 

 

 

 

 

எவளவு வேகமா போகேலுமோ அவளவு வேகமா ஓடிப்போய் தோட்டத்தில புல்லுப்புடுங்கி கொண்டிருத்த அப்பாவுக்கு செய்தி சொல்லி…அப்புவ ஆட்டோ பிடிச்சு ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழியிலையே அப்பு தவறிற்றார்..அப்பு அடிக்கடி சொல்லும் “மோன வாழுறப்ப எப்பிடி வாழ்றமோ சாகிறப்பகூட யாருக்கும் கரைச்சல் இல்லாமதான் மோன போக வேணும்”. அப்புவ நினைக்க மனசுக்கு பெருமையாவும் வயதுக்கு மீறிய துக்கமாவும் இருந்திச்சு அப்புக்கு செய்யவேண்டியதெல்லாம் செய்து எந்த குறையுமில்லாம அப்புவ அனுப்பிவைச்சம்.

“இப்ப நீங்க உங்க தரப்பு நியாயத்த முன் வைக்கலாம் மிஸ் மாங்கனி”. நீதிபதியின் உரத்த குரலில் சுயநினைவுக்கு வந்தவளாய் அப்புவின் வளர்ப்பு மகள்நான் பேச ஆரம்பிக்கிறேன்.” மணிக்கணக்கா பேசி மற்றவங்கள வெறுபேத்தக்கூடாது மோன. விசயத்த சுருக்கமா தெளிவா பட்டென்டு பேசனும். உன்ன பெரிய வக்கீல் ஆக்கணும் என்ட கனவு நிறைவேற முதலே கடவுள் கூப்பிட்டுட்டார் மோன”. அப்புவின் கடைசி வார்தைகள் காதுகளில் கேட்டபடியே வழக்கில் வென்றுவிட்ட பெருமிதத்துடன் பைய முன்னேறுகிறாள் இம்மாங்கனி.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…

Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

எப்போதுமே அப்புக்களும் ஆச்சிகளும் அப்படித்தான் அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்தவர்கள்