உயிர் கொடு

1
657
images (1)

 

 

 

 

 

 

தவம் பெற்ற கவியே
நான் கற்ற கல்வியே
தேடுகிறேன் வாழ்வில் வான்பிறையே வாராய்…!

பக்குவாமாய் படிக்க
எத்தனையோ இராத்திரிகள் விழித்து
தியாகத்தின் மறுபக்கம் நின்று
அத்தனையும் அர்த்தமுள்ளதாக்க
கதிரவனே கொஞ்சம் கருணை காட்டு…!

நித்தமும் இந்த வாழ்வில் நிம்மதிக்கான வழியை எதிர்பார்த்து
துடிக்கும் என் இதயவோசையை
விதி விட்ட வழி என்று.
கண்ணை முடி கடக்க
வாழ்க்கை கற்பணை உலகமல்லவே…!

கோடிக்கணக்கில் வானில் தோன்றும் நட்சத்திரமே
எனக்கு உறவுகள் இல்லை என்று எண்ணிவிட கூடாதென்றா
ஆறுதலாய் வந்தாய்…!

எதிர்காலம் என்னாகுமோ
எதிர்பார்த்த காலங்கள் மண்ணாகுமோ
விதைக்கப்பட்ட விதைகள் வீணாய் போய்விடுமோ
வரம் கொடு இறைவா..!

என் செயல்களுக்குஉயிர் கொடு…!

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அழுத்தம் திருத்தமான எதிர்பார்ப்பு நிறைந்த கவி நிரம்பிய வரிகள்