போகிறாய் போ

0
537
wp2565499

 

 

 

 

 

நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான்
என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான்
வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும்
என் வாழ்க்கையில் உன்னை இணைத்திட எதிர் பார்க்கிறது என் காதல் !

மேகங்களைக் கண்டு மோகம் கொண்ட தரையோ
தாகம் என்று தண்ணீரை அழைப்பது போல்
உன் தேகம் கண்டு என் காதல் வரவில்லை

காற்றிருந்தும் சுவாசிக்கத் தவிக்கிறேன்
என்னை எறித்திடும் எண்ணையாய்
நீ என்னில் தெளித்திடும் மொழிகளால்
எத்தனை காதல் நீ கண்டிருந்தாலும்
இத்தனைக் காதல் கொண்டதில்லை நீ
சித்தனாய் என்னை வாழச் சொல்லிப் போகிறாய்

போ !
விழிகள் மூடி உன்னை வழியனுப்புகிறேன்
திறந்திருந்தால் கண்ணீரில் என் உருவம்
காணாமல் போய்விடும் என்பதால் போ !!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments