நீலக்குறிஞ்சி

0
1336

 

 

 

 

Strobilanthes kunthianus (`ஸ்டிரோபிலான்தஸ் குந்தியானஸ்’) என்ற தாவரவியல் பெயர் கொண்ட புதர்வகையைச் சேர்ந்த நீலக்குறிஞ்சிச்செடி   இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் Acanthaceae (அகாந்தேசியே),குடும்பதைச்சேர்ந்தது. குறிஞ்சி மலர்களில். ஆண்டுதோறும் பூப்பது; 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது; 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ நீலக் குறிஞ்சி மலர், சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.

    நீலக்குறிஞ்சி மலைப்பாங்கான இடங்களில். கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.  மணி போன்ற வடிவம் கொண்ட, ஜூலை முதல் டிசம்பர் வரை பூக்கும்  குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மிக அதிக பரபப்ளவில் பூக்கள் மலர்ந்திருப்பதைக்காணலாம்

    உதகமண்டலத்தில்  இம்மலர்கள் மலைச்சரிவு முழுவதும் பூப்பதால்,  அந்த மலையே நீல நிற கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும்.  ஆச்சரியமூட்டும் இந்த இயற்கை நிகழ்வினாலேயே இவ்விடத்திற்கு நீலகிரி எனப்பெயர் வந்தது

இத்தாவரங்கள் உள்கடிகாரம் எனப்படும் internal calendar    அமைப்பினைக்கொண்டு இரவு பகல்களின் நீளத்திலிருக்கும் வேறுபாடுகளைக் கணக்கிட்டு பூக்கும் வருடங்களுக்காக காத்திருக்கின்றன. இதுபோல நீண்ட இடைவெளியில் மலரும் தாவரங்கள்  ’’பிலிடெசியல்’’ – (plietesials)  எனப்படுகின்றன

 அடரந்த கிளைகளில், எதிரிலைகல் செறிந்துள்ள   இத்தாவரத்தில் , நீண்ட கூம்பு வடிவ  அமைப்பில் செருகினாற்போன்ற நீலநிறமலர்களும்  வெடித்துச்சிதறும் சிறிய விதைகளும் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.  ஒரே சமயத்தில் மிகஅதிக அளவிலான விதைகளை உருவாக்கும் தாவரங்களின் தன்மையை தாவர அறிவியல் மாஸ்டிங் (masting) என்கிறது. இத்தாவரங்கள் தங்கள் சந்ததிகளை அழியாமல் பாதுகாக்க இப்படி ஒரே சமயத்தில் பூத்து பல்லாயிரக்கணக்கில் விதைகளை உருவாக்குகின்றன

   குறிஞ்சியின் மலர்தல் காலங்கள் 1838, 1850, 1862, 1874, 1886, 1898, 1910, 1922, 1934, 1946, 1958, 1970  1982, 1994, and 2006 ஆகிய வருடங்களில் ஆவணப்படுத்தபட்டிருக்கின்றது 1994-ஆம் ஆண்டில் பூத்த இச்செடி, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலும் கேரளாவிலும் 2006-ஆம் ஆண்டில் பூத்தது.  2018-ம் ஆண்டில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை மீண்டும் மலர்ந்த  இம்மலர்களை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments