பயணங்கள்

0
556

 

 

 

 

பயணங்கள் வேறுபட்டவை
சில நாளில் ரசிக்கவும்
பல நாளில் வெறுக்கவும்
ஏதோ ஒன்றை நினைத்துத் தொலைக்கவும்
எல்லோருக்கும் ஏதோ ஓர் பயணம் வாய்த்துவிடுகிறது
மனிதர்களிலிருந்து தூரப்பட நினைக்கும் மனம்
சுதந்திரமான பயணங்களையே தேர்ந்தெடுக்கிறது
ஆனால் உண்மையில் பயணங்கள்
நம் அச்சத்தை விட்டும்
நிறைவேறா கனவுகளை விட்டும்
எதிர்கால கடமைகளை விட்டும்
கொஞ்சமாய்
காலதாமதமாய்
அதிகபட்சம் ஆட்கொள்ளும் துயரங்களிலிருந்தும்
அப்போதைக்கு நம்மை கடத்திச் செல்கிறது
ஒரு முடிவிலி என எந்தப் பயணங்களும் நீள்வதில்லை
ஏதோ ஒரு தரிப்பிடம் பயணத்தின் இடையிலோ
முடிவிலோ நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது
அதுவரை  
பிடித்தோ
பிடிக்காமலோ
எல்லோரது பயணங்களும்
நீண்டு கொண்டுதானிருக்கும்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments