வால் காக்கை (Rufous Treepie)

0
1741

இந்தியா முழுவதும் காணப்படுகிற இப்பறவையின் Dendrocitta Vagabunda என்னும் அறிவியல் பெயரின் பொருள் மரங்களுக்கு இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும். காகத்தை போலவே தடித்த அலகும், கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறத்தில் இறக்கையும், இறக்கையில் வெள்ளை பட்டை காணப்படும் மைனாவின் அளவில் இருக்கும் இவற்றின் நீண்ட வால் சாம்பல் நிறம் மற்றும் கருமை முனையுடையது. இப்பறவை தமிழில் வால் காக்கை என அழைக்கப்படுகின்றது. இவற்றின் உணவு பழம், பூச்சிகள், சிறு பல்லிகள், பிற பறவைகளின் முட்டை,குட்டிகள் என்ற கலவையாக இருக்கும் . கூட்டமாக காடுகளிலும் நகரப்பகுதிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் இவை வசிக்கும். இதன் ஆண் பெண்பறவைகள் வேறுபாடுகளின்றி ஒன்று போலவே இருக்கும்.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இவற்றின் இனப்பெருக்க காலத்தில் நான்கு முதல் ஐந்து வெண் சிவப்பு நிறத்திலான முட்டைகளை இடும்.. தனது கூட்டை மரத்தின் உயரத்தில் இலைகளுக்கு நடுவில் மறைவாக அமைக்கும். இதன் பிற பெயர்கள்; மாம்பழத்தான் ,அவரை கன்னி ,ஓலை நாலி ,முக்குருணி ,அரிகாடை.

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments