ஊமைக் காதல்

0
632

 

 

 

 

நான் உன்னை பார்த்து கூட இல்லை
உன் குரலை மட்டும் கேட்டே உன்னை
காதல் செய்தேன்.

நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை
என்று நினைத்தேன்
நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லை
உன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.

நீ சென்னதை எல்லாம்
உண்மையென கண்மூடித்தனமாக
உன்னை நம்பினேன்.

என்னை சந்திக்க வேண்டும் என்று
நீ ஆசை கொண்டாய் அதை என்னிடம்
சென்னேன். நானும் சரி என்றேன்
உன்னை பார்க்கப் போகும் ஆனந்தத்தில்
என்னையே மறந்து தலைகால் புரியாமல் தடுமாறினேன்

நீ என்னை சந்திக்க வந்தாய்
ஆனால் நீ ஏதிர்பார்த்தது போல்
பேரழகியாய் நான் இல்லை
என்றாய்….

அப்போது தான் உன்னைப் பற்றி அறிந்தேன்.
உன் முன் வந்தது உன் காதலி அல்ல…

எப்படி இருந்தாலும் என்னை ஏற்பாயா மாட்டாயா என்று உன்னை சோதித்தேன்
ஆனால்
நீ விரும்பியது உடலை மட்டுமே….
உண்மையான உள்ளத்தையும் அல்ல….
என் உணர்வுகளையும் அல்ல….

அப்போது தான் புரிந்தது கொண்டேன் காதலிக்க
இரு மனங்கள் தேவையில்லை
அழகு மட்டும் இருந்தால் போதும் என்று

உடலை பார்க்கும் ஆடவர்கள்
நடுவே உள்ளத்தை பார்க்கும் ஆடவன்
இருக்கிறானா????😔😔😔

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments