பெண்

0
1995

ஒரு பெண்ணுக்கேயான லட்சணங்கள் அதிகம்…..

சட்டென கோபப்படுவாள்
வெளிப்படையாய் 
பொறாமைப்படுவாள்
தேவையின்றியும் 
புன்னகைப்பாள்
காரணமின்றியும் 
கண்ணீர் சிந்துவாள்
பகை மறந்தும் 
உதவி தேடுவாள்
ரோஷம் விட்டும் 
நட்பு பாராட்டுவாள்
எதிர்பாரா சமயத்தில் 
உன் குறை 
பகிரங்கம் செய்வாள் 
அந்தரங்கமும் காப்பாள்
நிறைகள் கண்டால் 
அவ்வளவுதானே 
என்பது போல் 
கடந்தும் விடுவாள்


காதல் கொள்வாள் 
காத்திருப்பாள் 
காயப்படுவாள் 
பழி சொல்வாள் 
பகை மறப்பாள் 
குழி பறிப்பாள் 
குற்றமும் புரிவாள் 


உயர்த்துவாள் 
உணர்த்துவாள் 
உயர்வாள் 
வீழ்கினும் எழச் செய்வாள் 
நினையா விட்டால் 
கசந்து 
மறந்து 
கெட்டொழிந்து போ என 
சாபமும் விடுவாள் 
பின்னொரு பொழுதில் 
உனக்கான ப்ரார்த்தனைகள் 
அடுக்கவும் செய்வாள் 


பெண் 
சொல்லும் போதே 
யாதுமாவாள் 
நீ தோள் தந்தால் 
மாலையாவாள் 


ஒவ்வொரு பெண்ணும்

உன் வாழ்வில் தாயாய் 
சகோதரியாய் 
தோழியாய் 
காதலியாய் 
மனைவியாய் 
மகளாய் என 
உன் வாழ்க்கையை 
உனக்காய் நிரப்பிப் போவாள்

பிறிதொரு நாளில் 
நீ சபிக்கவோ
நினைக்கவோ காரணமாய் மாறிப் போவாள்……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments