இலட்சியதுக்கான தேடல்

2
1669
F6087EBB-4CFB-49BA-B614-5C3697FCE6F5-60ca075e
இலட்சியத்துக்கான தேடல்

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள்.

அழும் குழுந்தைக்கு கூட இலட்சியம் என்ற ஒன்று உருவாகின்றது. பாலை அல்லது வேறு தேவைகளை பெற்றுக்கொள்ளும் வரை தன்னுடைய இலட்சியத்திற்காக தொடர்ந்து உழைக்கின்றார்கள். ஆம் அழுதுகொண்டு இருக்கின்றார்கள். குழுந்தைப்பருவத்தில் இருந்து எமக்கு தெரியாமல் எங்களுடன் சுயமாகஉருவாகியதுதான் இலட்சியத்துக்கான தேடல்.

மனம் வித்தியாசமானது மனநிலையும் குழுப்பமானது.  இலகுவாக புரிந்துகொள்ள முடியாத , கட்டவிழ்க்கமுடியாத மர்மங்களையும் கொண்டது.  அப்படிப்பட்ட மனமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானதேடல்களை , இலட்சியதுக்கான தேடல்களை ஒளித்துவைத்து இருக்கும். காலையில் எழுந்து சராசரி மனிதன்போன்று பிறந்தோம் பிறருக்காக உழைந்தோம் இறந்தோம் என்று இல்லாது சுயமாக சிந்தித்து தனக்கானஇலட்சியத்தை உணர்ந்து அதற்கான தேடலை தொடங்கும் போது அவனுடைய இலட்சியதுக்கான தேடல்ஆரம்பிக்கின்றது.

நீங்கள் இப்போது வேலையில் இருக்கலாம் அல்லது படித்துக்கொண்டு இருக்கலாம் ஆனால் உங்களில்எத்தனைபேர் உங்களின் இலட்சியத்துக்கான தேடலில் வெற்றி அல்லது தோல்வி அடைந்து இருக்கின்றீர்கள் ?

காலம் இன்னும் செல்லவில்லை நெஞ்சில் கைவைத்து இதயத்தின் துடிப்பு கேட்கின்றதா என்று பாருங்கள். இதயத்தில் துடிப்பு இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கின்றது. உங்களின்இலட்சியமும் உங்களின் தேடலுக்காக காத்திருக்கின்றது.

இலட்சியத்துக்கான தேடல்

Kirupan ✍️

4.5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

நறுக்கென சுருக்கமாக நல்ல விடயமொன்றை அலட்டலில்லாமல் பகிர்ந்திருக்கின்றீர்கள். 

Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

(y)