எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0
1795

நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!!

உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல் பற்றிய கீழ்வரும் குறிப்புகளை (அனைத்தும் கட்டாயமானது) பதிவு செய்து தெளிவான அட்டைப்படத்துடன் ஒரு படைப்பாக சமர்ப்பித்திடுங்கள். 

புத்தகத்தின் பெயர் (Book’s Name) :
வகை (Genre) :
எழுத்தாளர் பெயர் (Author’s Name) :
பக்கங்கள் (Pages) :
வெளியிடப்பட்ட வருடம் (Published Year):
விலை (Price) :
கையிருப்பு (Stock)
இப்புத்தகத்தை பற்றி (About Book) :
நீர்மை வலைத்தளத்தில் உங்கள் எழுத்தாளர் பக்கத்தின் இணைப்பு (Your Author Page Link on neermai.com) :

எந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களை இலவசமாக விற்பனை செய்ய முடியும்?

*நீர்மை வலைத்தளத்தில் தொடர்ச்சியாக தங்கள் படைப்புக்களை பதிவிடும் மற்றும் எழுத்தாளர் கணக்கினை பேணும்              அனைத்து எழுத்தாளர்களும்
* புதிய எழுத்தாளர்கள் தங்களது நூல்களை பிரசுரிக்க விரும்பின் இந்த இணைப்பில் சென்று உங்களை எழுத்தாளராக முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்  https://neermai.com/register
* எந்த ஒரு நாட்டிலிருந்தும் எந்த ஒரு எழுத்தாளரும் எந்த மொழியிலும் அமைந்த நூலினை விற்பனை செய்து கொள்ள முடியும்.

உலகின் எந்த ஒரு பிரதேசத்திலிருந்தும் வாசகர்கள் உங்களது நூல்களை ஓடர் செய்து பெற்றுக் கொள்வதற்காகவும் எழுத்தாளர்களின் படைப்புக்களை உலகறியச்செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து எதுவித பிரசுரிப்புக் கட்டணங்களையும் கோராது இலவசமாக படைப்பாளர்களின் நூல்களை உலகவாழ் வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இந்த முயற்சி நீர்மை வலைத்தளத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் உதவிகள் தேவையாயின் எமது அலுவலக இலக்கத்திற்கு காலை 9.00 – பி.ப 5.00 மணிக்குள் தொடர்பினை ஏற்படுத்த முடியும். அல்லது contact@neermai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும்.

 

 

 

 


 

 

 


0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments