Bye and Take Care

0
564

 

 

 

 

ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்
இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்
இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்
அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை
எப்படியோ ஒழிந்துபோ
என்ற கடைசி அணைப்பிலும்
ஒரு நெருக்கமான அன்பு
பரிச்சயமான உறவு
பழகிய நட்பு
எல்லாமே விடைபெறுகின்றது

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments