Digits – என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!

0
1167

 

மிகவும் துல்லியமாக ஊகிப்பதில் வல்லவரா? அப்ப இது (4digits) உங்களுக்கான விளையாட்டு தான். இதை விளையாடுவது மிகவும் எளிது.

4 வெவ்வேறு இலக்கங்கள் கொண்ட ஓர் எண்ணை உங்கள் கணிணி தனது மனதிற்குள் (அதாவது, நினைவகத்தில்) நினைத்துக் கொள்ளும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான்!!

” இதில் என்ன இருக்கு? நாங்கல்லாம் வரிசையா எண்ணை அடித்து கண்டுபிடிப்போம்ல!!” அங்க தான் இருக்கு விளையாட்டே!!

ஒரு எண்ணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 8 வாய்ப்புகள் தான். எவ்வளவு விரைவாக முடிக்கிறீர்கள் என்பது உங்கள் திறமையைப் பொறுத்தது.

விளையாட்டில் ஊகத்தை நீங்கள் உள்ளிட்டவுடன் , $A #B என்ற பதில் கிடைக்கும். அதாவது, உங்கள் எண்ணில் உள்ள $ இலக்கங்கள் சரியாக அதே இடத்தில் உள்ளன. # இலக்கங்கள் இடம் மாறி உள்ளன.(உ.தா: விடை 1729 : உங்கள் ஊகம் 1234 → 1A 1B; 5086 → 0A0B; 1279 → 2A 2B)

சரியான எண்ணை நீங்கள் கண்டுபிடித்தால் 4A 0B என்று வரும்..

இந்த விளையாட்டினை யொங்கி பான் (Yongzhi Pan) python கொண்டு எழுதியுள்ளார். இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும்.

இதனை நிறுவ python-gtk2 மற்றும் python-glade2 ஆகியவையும் தேவை. இது இயங்குதளம் பாகுபாடின்றி கிடைக்கிறது (Windows / Linux / Mac) .

இந்த விளையாட்டை விளையாட : sourceforge.net/projects/fourdigits/

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments