IQ Level ஐ அதிகரிக்கும் முறைகள் – Ways to Increase our IQ Levels

0
6182

 

 

உங்கள் IQ அளவை அதிகரிக்க முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரியான வகையான அறிவுசார் பயிற்சியுடன் உங்கள் IQ அளவினை அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? மனித நுண்ணறிவு தொடர்பான மிக முக்கியமான திறன்களை வளர்ப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த கட்டுரையில், உங்கள் IQ ஐ அதிகரிக்கக்கூடிய சில செயற்பாடுகளையும், கர்ப்ப காலத்தில் குழந்தையின் IQ ஐ மேம்படுத்துவதற்கான சில வழிகளையும் நாங்கள் ஆராய்வோம்.

IQ Level என்றால் என்ன?

அறிவுத்திறனுக்கு (Intelligence) குறுகியதாக இருக்கும் IQ, ஒருவரின் அறிவுசார் நுண்ணறிவு மற்றும் ஆற்றலின் அளவீடு ஆகும். இந்த அளவீட்டு முறை 1900 களில் ஆல்பிரட் பினெட் (Alfred Binet) என்ற பிரெஞ்சு உளவியலாளரால் பிரபலப்படுத்தப்பட்டது.

நுண்ணறிவானது (IQ) சில குறித்த அனுமதிக்கப்பட்ட உளவியலாளர்களினாலும் மற்றும் சிலநேரங்களில் சிறந்த மனநலத்துறையில் தேர்ச்சிபெற்ற வளவாளர்களினாலும் தரப்படுத்தப்பட்ட சோதனையைப் (Standardized Tests) பயன்படுத்தி IQ அளவிடப்படுகிறது. பொதுவான தரப்படுத்தப்பட்ட IQ சோதனைகள் பின்வருமாறு:

Wechsler Intelligence Scale for Children (WISC-V)
Wechsler Intelligence Scale for Adults (WAIS)
Stanford-Binet Intelligence Scale

நம்மில் பலரிடையே ஒன்லைன் மூலமான IQ Test மற்றும் IQ அப்ளிகேஷன்கள் பாவனை அதிகரித்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஓர் உளவியலாளர் நமது நுண்ணறிவினை அளவிடுதல் போலவே அத்தனை துல்லியமாய் அளவிடுவதில்லை.

புத்திசாலித்தனத்தை அளவிடுவதற்கான ஒரு வழிழுறையாக IQ அளவீட்டு முறை என்றாலும், அது மாத்திரமே புத்திசாலித்தனத்தை அளக்கக்கூடிய முறைமை அல்ல. ஆனால் IQ அளவீடானது ஒருவரின் மன ஆரோக்கிய நிலையினை அளவிடும் முறையாகவும் கற்றலில் குறைபாடுள்ளவரா என கண்டறிவதற்கும் IQ அளவீட்டு முறையானது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது.

 

 

IQ ஐ அதிகரிக்கக்கூடிய செயல்பாடுகள்

தேசிய மருத்துவ நூலகமானது ஒருவரின் புத்திசாலித்தனமென்பது (Intelligence) பல்வேறு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம் எனக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் சில குறிப்பிடக்கூடிய காரணிகள்:

  • பெற்றோர் நுண்ணறிவு மட்டம் – Parental IQ
  • மரபணுக்கள் – Genes
  • வீட்டு வாழ்க்கை – Home life
  • பெற்றோருக்குரிய பாணி – Parenting style
  • ஊட்டச்சத்து – Nutrition
  • கல்வி – Education

நமது புத்திசாலித்தனத்தின் பல்வேறு பகுதிகளை மேம்படுத்துவதற்கு செய்யக்கூடிய சில செயற்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

நினைவக நடவடிக்கைகள் (Memory Activities)

நினைவக செயல்பாடுகள் நினைவகத்தை மட்டுமல்லாமல், பகுத்தறிவு மற்றும் மொழி திறன்களையும் மேம்படுத்த உதவும். உண்மையில்இ மெமரி தொடர்பிலான விளையாட்டுக்கள் ஆராய்ச்சி ஆய்வுகளில் நினைவகமானது மொழி மற்றும் பொருள் அறிவுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆராய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

பகுத்தறிவு மற்றும் மொழி இரண்டும் ஒருவரது அறிவுக்கூர்மை அல்லது புத்திசாலித்தனத்தை (Intelligence) அளவிடும் நடவடிக்கைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நினைவூட்டல் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஒருவர் தொடர்ந்து நுண்ணறிவை வளர்க்க முடியும்.

நினைவக பயிற்சி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் பின்வருமாறு:

ஜிக்சா புதிர்கள் – Jigsaw puzzles


குறுக்கெழுத்து புதிர்கள் – Crossword puzzles


செறிவு அட்டை விளையாட்டு அல்லது அட்டை பொருத்தம் – concentration card game, or card matching


சுடோக்கு விளையாட்டு – sudoku

நிர்வாக கட்டுப்பாட்டு செயற்பாடுகள் (Executive control activities)

நிர்வாகக் கட்டுப்பாடு என்பது சிக்கலான அறிவாற்றல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகும். இது நிர்வாக செயல்பாடு மற்றும் நம்பகமான மூலத்தின் ஒரு பகுதியாகும், இதில் நிர்வாக மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவை அடங்கும்.

நிர்வாக கட்டுப்பாட்டு பயிற்சியை உள்ளடக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

ஸ்கிராப்பிள் – Scrabble

 

 

 

படம் வரைந்து நடித்துக்காட்டும் பிக்ஷனரி – Pictionary

 

 

 

மூளைச்சலவை விளையாட்டு (விடுகதைகள்,புதிர்கள் மற்றும் தர்க்கரீதியான சிந்திக்கும் கேள்விகள்) – Brainteasers

 

 

 

தொடர்புடைய திறன்கள் (Relational skills)

ரிலேஷனல் ஃபிரேம் தியரி (Relational Frame Theory) என்பது தொடர்புடைய அறிவாற்றல் தொடர்புகள் மூலம் மனித அறிவாற்றல் மற்றும் மொழியின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. ரிலேஷனல் ஃபிரேம் தியரியை தலையீடாகப் பயன்படுத்துவது குழந்தைகளில் IQ மதிப்பெண்களை கணிசமாக மேம்படுத்தும் என்று 2011 ஆம் ஆண்டின் ஆராய்ச்சி காட்டுகிறது.

மிகச் சமீபத்திய ஆய்வில் IQ, வாய்மொழி பகுத்தறிவு மற்றும் எண் பகுத்தறிவு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டன.

தொடர்புடைய பயிற்சியை (Relational skills) உள்ளடக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

மொழி கற்றல் புத்தகங்கள் (“this is a…” and “that is a…”)
பொருள் ஒப்பீடுகள் (full cup versus empty cup)
அளவு ஒப்பீடுகள் (Rupees versus Cents)

இசை கருவிகள் (Musical instruments)

இசைக் கலைஞனாகுவதற்கு மாத்திரமே ஒருவர் இசைக் கருவியைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு ஆய்வில், இசைக்கருவி ஒன்றினை இசைக்கத்தெரியாத கலைஞர்களை விட இசைக்கலைஞர்களுக்கு சிறந்த நினைவகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நுண்ணறிவில் நினைவகம் முக்கிய பங்கு வகிப்பதால், நீங்கள் எப்போதும் கற்றுக்கொள்ள விரும்பும் இசைக் கருவியை இப்போதாவது கற்றுக்கொள்வது உங்கள் IQ க்கு பயனளிக்கும்.

 

 

புதிய மொழிகள் (New Languages)

பல மொழிகளைக் கற்றுக்கொள்வது மனித மூளைக்கு நன்மை பயக்கும் என்பதில் ஆச்சரியமில்லை

ஆய்வுகள் மொழி கற்றலுக்கும் IQ க்கும் இடையிலான தொடர்பினை இவ்வாறு குறிப்பிடுகின்றது. 18 முதல் 24 மாதங்கள் வரை பேச்சு மற்றும் பிற நபர்களுடன் தொடர்புபடுவதன் மூலம் மொழியினை கற்றுக்கொள்வதானது பிற்கால வாழ்க்கையில் அறிவாற்றல் விளைவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

அடிக்கடி வாசித்தல் (Frequent reading)

மனித அறிவாற்றல் வளர்ச்சியில் புத்தகங்கள் எவ்வளவு பயனளிக்கின்றன என்பதை எவருமே மறுப்பதற்கில்லை.
ஒரு சமீபத்திய ஆய்வில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தமாக வாசிக்கும் போது, குழந்தைக்கு அதிக மொழி மற்றும் அறிவாற்றல் மேம்பாட்டு திறன் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

தொடர்ச்சியான கல்வி (Continued Education)

கல்வி, எந்த வடிவத்திலும், மனித நுண்ணறிவின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

IQ மற்றும் கல்வி குறித்த நம்பகமான ஆதாரத்தின் ஆய்வுகளில், 600,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் IQ மட்டங்களில் கல்வியின் விளைவைத் தீர்மானிக்க ஆய்வு செய்யப்பட்டனர். முறையான கல்வியின் பின்னர் அடுத்து வருகின்ற ஒவ்வொரு ஆண்டிலும் பங்கேற்பாளர்கள் ஒன்று முதல் ஐந்து IQ புள்ளிகளை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

நன்றி : தகவல் மூலம் Healthline வலைத்தளத்தின் How to increase IQ Boosting எனும் ஆங்கிலக்கட்டுரை

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments