பகுதி – 6
- PHP மாறிலிகள் (Variables)
- மாறிலிகள் உருவாக்குதல் மற்றும் பெயரிடுதல்
- மாறிலிகளுக்கு மதிப்புகள் கொடுத்தல்
- மாறிலிகளின் மதிப்புகளை அணுகுதல்
- மாறிலிகளின் மதிப்புகளை மாற்றுதல்
- மாறிலி set செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தல்
- மாறிலிகளை புரிந்து கொள்ளுதல்
- முழு எண் மாறிலி வகை (Integer Variable Type)
- தசம் எண் மாறிலி வகை (Float Variable Type)
- இரும மாறிலி வகை (Boolean Variable Type)
- எழுத்து மாறிலி (String Variable)
- எழுத்துக்களை எழுதுதல் மற்றும் பிரித்தல் (Extracting and Writing String)
- heredoc எழுத்துக்களை உருவாக்குதல்
variable என்பதற்கு தமிழில் மாறி என்று அர்த்தம். தகவல்களோடு நாம் வேலை செய்யும் போது அத்தகைய தகவல்களை சேமித்து வைப்பதற்கு வசதியான ஒரு வழி வேண்டும். அத்தகைய வசதியான ஒரு வழிதான் மாறிகள். மாறிகள் மதிப்புகளைக் கொண்டிருக்கும். நிரல்கள் இயங்கும் போது மாறிகள் கொண்டிருக்கும் மதிப்புகள் மாறலாம்.
மாறிகளுக்கு பெயர் வைத்தல்:
மாறிகளை உருவாக்குவதற்கு முன்பு மாறிகளுக்கு எப்படி பெயரிட வேண்டும் என்பதை பார்த்துவிடுவது அவசியமானது.
அனைத்து PHP மாறிகளும் $ குறியீட்டைக் முன்னொட்டாக கொண்டே தொடங்கும்.
இந்த $ முன்னொட்டு அதைத் தொடர்ந்து வருவது ஒரு மாறி என்பதை PHP pre-processor க்கு தெரிவிக்கும்.
மாறியின் முதல் எழுத்து கட்டாயமாக ஒரு எழுத்தை கொண்டோ அல்லது _ (underscore) கொண்டுதான் தொடங்க வேண்டும்.
முதல் எழுத்தைத் தொடர்ந்து வரும் எழுத்துக்கள் எண்ணாகவோ, எழுத்தாகவோ அல்லது _ (underscore) ஆகவோ இருக்கலாம்.
மற்ற எதைக்கொண்டு மாறிக்கு பெயர் வைத்தாலும் அது பிழையாக கருதப்படும்.
கவனிக்கவும்:
PHP ஒரு case sensitive scripting language ஆகையால் சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
$myName என்பதும் $myname என்பதும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றல்ல.
சரியான முறை பெயரிடல்:
$_myName
$myName
$__myName
$myVar12
தவறான முறை பெயரிடல்:
$_1myName – underscore க்கு அடுத்து எழுத்துதான் வர வேண்டும்.
$1myName – முதல் எழுத்து எழுத்தாகத்தான் இருக்க வேண்டும், எண்ணாக இருக்கக் கூடாது.
$my-Name – எண், எழுத்து, underscore ஐத் தவிர மற்ற எதையும் பயன்படுத்தக்கூடாது.
மாறிகளுக்கு மதிப்புகளை அளித்தல்:
assignment operator -ஐப் பயன்படுத்தி மாறிகளுக்கு மதிப்புகள் அளிக்கப்படுகிறது. Assignment operator என்பது = (சமம்) குறியீடு ஆகும். மாறிகளுக்கு மதிப்புகள் கொடுக்கும் போது மாறிகள் இடதுபுறமாகவும் அதன்பின் = குறியீடும் அதனைத் தொடர்ந்து மாறிக்காக மதிப்பும் இருக்க வேண்டும். இறுதியாக ; (semicolon) உடன் முடிய வேண்டும்.
$myName = “stallman”;
$foss = “Free Open Source Software”;
$examNumber = 1002;
$cyclePrice = 1500.36;
இங்கு
$myName என்ற மாறிக்கு stallman என்ற மதிப்பும்
$foss என்ற மாறிக்கு Free Open Source Software என்ற மதிப்பும்
$examNumber என்ற மாறிக்கு 1002 என்ற மதிப்பும்
$cyclePrice என்ற மாறிக்கு 1500.36 என்ற மதிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாறிகளின் மதிப்புகளை அணுகுதல்:
இதுவரை மாறிகளை உருவாக்குவது, பெயரிடுவது, மதிப்புகள் கொடுப்பது பற்றி பார்த்தோம். இப்போது மாறகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்புகளை எப்படி அணுகுவது என்று பார்ப்போம். மாறிகளின் மதிப்புகளை அணுகுவது என்பது மிகவும் எளிமையான ஒன்று. உங்களுக்கு எந்த இடத்தில் மாறியின் மதிப்பு வேண்டுமோ அந்த இடத்தில் மாறியினுடைய பெயரை இட்டால் போதும். அந்த இடத்தில் மாறியின் மதிப்பு அளிக்கப்படும்.
கீழ்காணும் நிரலை இயக்கிப் பார்த்தால் இந்த கருத்தாக்கங்கள் நன்றாக புரியும்.
<?php
$myName = “Kathirvel”;
$myAge = 24;
$myHeight = 5.5;
$myWeight = 58;
echo “<b>Old Data</b>”;
echo “<br>”;
echo “My Name is : $myName”;
echo “<br>”;
echo “My Age is : $myAge”;
echo “<br>”;
echo “My Height is : ” . $myHeight . ” inches”;
echo “<br>”;
echo “My Weight is : ” . $myWeight . ” Kg”;
echo “<br>”;
$myName = “Linux Kathirvel”;
$myAge = 25;
$myHeight = 5.9;
$myWeight = 60;
echo “<b>New Data</b>”;
echo “<br>”;
echo “My Name is : $myName”;
echo “<br>”;
echo “My Age is : $myAge”;
echo “<br>”;
echo “My Height is : ” . $myHeight . ” inches”;
echo “<br>”;
echo “My Weight is : ” . $myWeight . ” Kg”;
?>
மேற்காணும் நிரலை variables.php எனும் பெயருடன் சேமிக்கவும். மேற்காணும் நிரலை இயக்கும் போது கீழ்காணும் வெளியீடு கிடைக்கும்.
இங்கு . (dot) ஆனது concatenation character ஆகும். அதாவது இரண்டு statement களை இணைப்பது. மேற்காணும் நிரலில் முதல்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அதே மாறிகள் புதிய மதிப்புகளுடன் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அப்படியென்றால் என்ன அர்த்தம். மாறிகளின் மதிப்பு நிலையானது அல்ல. மாறக்கூடியது.
PHP மாறியினுடைய வகையை மாற்றுதல்:
PHP பல்வேறு வகையான Data Type களை ஆதரிக்கிறது. குறிப்பாக integer, float, boolean, array, object, resource and string. இவையனைத்தையும் பற்றி நாம் பின்பு விரிவாக பார்க்க இருக்கிறோம். இப்போது மாறியினுடைய வகையை மாற்றுவது பற்றி பார்ப்போம்.
PHP ஒரு Loosly typed language JavaScript ஐப் போல. Loosly types language என்றால் ஒரு குறிப்பிட்ட data type இல் இருக்கும் variable ஐ வேறொரு data type க்கு மாற்றிக்கொள்ளலாம். interger லிருந்து float க்கு, float லிருந்து integer க்கு என மாற்றிக்கொள்ளலாம்.
Java, C, C++ போன்ற மொழிகள் Strongly Typed Languages. இந்த மொழிகளில் ஒரு குறிப்பிட்ட வகை data type லிருந்து வேறொரு வகை data type ற்கு மாற்றிக்கொள்ள முடியாது.
கீழ்காணும் நிரலைப் பாருங்கள்:
<?php
$myName = “Kathir”;
echo “My Name is $myName”;
$myName = 2500;
echo “<br>”;
echo “My Salary is $myName”;
?>
output:
$myName என்பது முதலில் String Data Type ஆகவும், பின்பு Intege Data type ஆகவும் தானாகவே மாறியுள்ளது.
மாறி மதிப்புகளை வைத்திருக்கிறதா என சோதித்தல்(Check Wether a variable is set):
மாறிகளுடன் நாம் வேலை செய்யும் போது மாறிகள் மதிப்புகளை வைத்திருக்கிறதா என்று அடிக்கடி சோதனை செய்து பார்க்க வேண்டியிருக்கும். இதற்காகவே PHP வழங்கியிருக்கும் function தான் isset(). Isset() functionஐப் பயன்படுத்தி மாறி மதிப்புகளை வைத்திருக்கிறதா இல்லையா என்பதை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம். Function பகுதியில் இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
கீழ்காணும் நிரலைப் பாருங்கள்
<?php
$myName;
if (isset($myName)) {
echo “It is Set.<br>”;}
else {
echo “It is Not Set.”;}
?>
வெளியீடு:
PHP மாறி வகைகளை புரிந்து கொள்ளுதல்:
இந்த பகுதியில் Integer, String, Float, Boolean மாறி வகைகளை காண இருக்கிறோம். Array, Object பின்வரும் பகுதியில் விரிவாக காணலாம்.
முழு எண் மாறி வகை (Integer Variable Type):
முழுஎண் மாறிகள் -2147483648 லிருந்து 2147483647 வரையில் உள்ள முழு எண்களை கொண்டிருக்கும். எதிர்முழு எண்கள் கழித்தல் (-) குறியை எண்ணிற்கு முன்னதாக கொண்டிருக்கும். மேற்காணும் மதிப்புகளை தாண்டும் போது இயல்பாகவே அது மிதவை (Float Point) வகைக்கு மாற்றப்படும்.
கீழ்காணும் உதாரண நிரலைப் பாருங்கள்:
<?php
$mobilePrice = 13000;
$myNegative = -13457231;
echo “Mobile Price : $mobilePrice”;
echo “<br>”;
echo “Negative Number : $myNegative”;
?>
வெளியீடு:
மிதவை எண் மாறி வகை (Float Variable Type):
தசம எண்களே மிதவை எண்கள் உதாரணமாக 1.067, 0.25, 423454567098, 84664435.9576
கீழ்காணும் நிரலை பாருங்கள்
<?php
$mobilePrice = 13000.3453453;
$myNegative = -13457231.3345354;
echo “Mobile Price : $mobilePrice”;
echo “<br>”;
echo “Negative Number : $myNegative”;
?>
வெளியீடு:
பூலியன் வகை மாறி (Boolean Variable Type):
பூலியன் வகை மாறிகள் true அல்லது false ஆகிய இரண்டு மதிப்புகளை மட்டும் கொண்டிருக்கும். Flow control and Looping இல் பூலியன் வகை மாறிகளைப் பற்றி விரிவாக காண்போம். குறிப்பாக if -ஐப் பற்றி பார்க்கும் போது காணலாம். வெளிப்படையாக நாம் true or false என்று சொன்னாலும். PHP நிரலுக்குள் அது 0 or 1 என்றுதான் எடுத்துக்கொள்ளும்.
கீழ்காணும் நிரலை காணுங்கள்
<?php
$myName = “Stallman”;
echo isset($myName);
?>
வெளியீடு
isset($myName) என்பது true ஆக இருப்பதால், அதனுடைய 1 என்று வந்திருக்கிறது.
சர மாறி வகை (String Variable Type):
வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை (words and sentences) வைத்துக் கொள்ள சர மாறி வகைகள் பயன்படுகிறது. சர மாறியிலிருந்து தேவைப்படும் போது அதனுடைய பகுதிகளை பிரித்தெடுக்க PHP அனுமதிக்கிறது.
சர மாறி வகைக்கான மதிப்புகள் ( ‘ ) Single Quotes அல்லது ( “ ) Double Quotes க் கொண்டு இருக்கும்.
கீழ்காணும் நிரலை பாருங்கள்
<?php
$myName = ‘Kathirvel Rajendran’;
$foss = “Free Open Source Software.”;
$string1 = “This string contains ‘single quotes’”;
$string2 = ‘This string contains “double quotes”‘;
echo “<br>”;
echo $myName;
echo “<br>”;
echo $foss;
echo “<br>”;
echo $string1;
echo “<br>”;
echo $string2;
?>
வெளியீடு
backslash (\) பின்னோக்கிய சாய்விற்கு பின் வருவது escape character எனப்படும். உதாரணமாக நீங்கள் $ குறியீட்டை வெளியீடாக பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு பின்னோக்கிய சாய்வைதான் பயன்படுத்த வேண்டும்.
கீழ்காணும் நிரலைப் பாருங்கள்:
<?php
echo “My Salary is \$5000.”;
?>
நிரலின் வெளியீடு
சில குறிப்பிடத்தகுந்த Escape Sequences.
\n – New Line
\r – Carriage Return
\t – Tab
\\ – Backslash Character
\” – Double Quotation Mark
\$ – Dollar sign (prevents text from being treated as a variable name)
\034 – Octal ASCII value
\xOC – Hexadecimal ASCII Value
Constants பயன்படுத்தும் முறை பற்றி விரிவாக விரைவில் காணலாம்