நீர்மையில் கதை சொல்வோம்! – ஜுலை 2020 கதைப்போட்டி

0
4207

கதை மாந்தர்களே,

நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான ‘கதை சொல்வோம்’ போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று நீர்மை வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

பரிசு விபரம்

  • தேர்வு செய்யப்படும் சிறந்த கதைக்குரிய 02 வெற்றியாளர்களுக்கு Mega Book Sellers நிறுவனத்தினால் பெறுமதி வாய்ந்த பரிசு வழங்கப்படும்.
  • போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டி நிபந்தனைகள் 

01. சமர்ப்பிக்கும் படைப்புக்கள் அனைத்தும் படைப்பாளரின் சொந்த படைப்பாக இருத்தல் அவசியம். வேறொருவரின் படைப்புக்களை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியாது.

02. நீர்மை வலைத்தளத்தில் ஆரம்பத்தில் பகிரப்பட்ட படைப்புக்களாக இருத்தல் கூடாது. புதிய படைப்புக்களாக இருத்தல் அவசியம்.

03. கதைகள் எந்தவொரு தலைப்பிலும் பகிரலாம். 1000 சொற்களுக்கு மேற்பட்டிருத்தல் அவசியம். அதற்குக் குறைவான சொற்கள் கொண்ட கதைகள் சமர்ப்பிக்கும் போது போட்டி தவிர்த்து நீர்மை வலைத்தளத்தில் உங்களது எழுத்தாளர் முகப்பின் (Author Profile) கீழே பிரசுரிக்கப்படும். மேலும் போட்டிக்கென சமர்ப்பிக்க விருப்பமில்லாதவர்கள் தங்களது படைப்புக்களை வழமை போன்று வலைத்தளத்தில் உங்களது பெயரின் கீழ் உங்களது படைப்புக்களை தொடர்ச்சியாக சமர்ப்பிக்க முடியும். வலைத்தளத்தில் போட்டிகள் நடைபெறும்போது போட்டிக்குரிய படைப்புகள் மாத்திரம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படுவதில்லை என்பதை எழுத்தாளர்கள் தெளிவாக அறிந்து கொள்வது சிறந்தது. 

04. படைப்புக்களை சமர்ப்பிக்கும் முன்னர் எழுத்துப்பிழை மற்றும் சொற்பிரயோகங்களை சரி பார்த்தல் அவசியம். 05 எழுத்துகளுக்கு மேல் பிழைகள் காணப்படுமாயின் போட்டிக்கு தெரிவு செய்யும் படைப்புகளிலிருந்து தவிர்க்கப்படும்.

05. ஒருவர் அதிகபட்சம் 10 கதைகள் வரை பகிரமுடியும். பத்திற்கு குறைந்து எத்தனை கதைகளையும் ஒருவர் சமர்ப்பிக்க முடியும். மேலும் சமர்ப்பிக்கப்படும் படைப்புக்கள் அனைத்தும் நீர்மை வலைத்தளத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டவாறு அமைந்திருத்தல் வேண்டும்.(https://neermai.com/மறுப்பு-disclaimer)

படைப்புத் தேர்வு நிபந்தனைகள்

போட்டிக்குரிய சிறந்த படைப்புக்கள் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இறுதிக் கட்டத்திற்கு தேர்வு செய்யப்படும்.

01- வாசகர்கள் தேர்வு
02- நடுவர்கள் தேர்வு

• முதலாவதாக போட்டிக்கு சமர்ப்பிக்கும் படைப்பானது 5000 தனித்துவமான பார்வைகள் (Unique Views) மற்றும் 300 விருப்புகள் (Likes) உள்ளடக்கியிருத்தல் அவசியம். தனது படைப்பு எத்தனை பார்வைகளை கடந்துள்ளது விருப்பங்களை பெற்றுள்ளது என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தான் சமர்ப்பிக்கும் படைப்பின் கீழே தோன்றும் கண் அடையாளத்திலிருந்தும் கை அடையாளத்திலிருந்தும் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய நிபந்தனைகளை எதுவித படைப்பும் போட்டிக்குரிய வகையில் கொண்டிருக்கவிலலை எனில் ஒரு படைப்பு மாத்திரமே வெற்றிக்குரிய படைப்பாக தேர்வு செய்யப்படும்.

• போட்டியாளர்கள் 5000 குறைந்தபட்ச பார்வைகளை பெறுவதற்காக நீங்கள் உங்களது படைப்புக்களை ஏனைய நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமே தவிர நீங்களே மீண்டும் மீண்டும் உங்கள் படைப்புப் பக்கத்தினை Refresh செய்து பார்வையினை அதிகரிக்கக்கூடாது. அவ்வாறு நீங்கள் செய்வதனால் உங்கள் படைப்பிற்கு அதிக பார்வைகள் தோன்றினாலும் எங்களால் அதில் தனித்துவமான நேர்மையான படைப்பிற்குரிய பார்வைகளை பிரித்தறிய முடியும் என்பதை எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். மேலும் அவ்வாறான விதிமீறல்களுக்குரிய படைப்பானது போட்டியிலிருந்து நீக்கப்படும்.

• இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் கதைகள் செப்டம்பர் 27, 2020 அன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும். அவற்றுள் இறுதியாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதைகள் செப்டம்பர் 30, 2020 அன்று வலைத்தளத்தில் அறிவிக்கப்படும்.

போட்டிக்கு இத்தகைய நிபந்தனைகள் அவசியமா?

ஆம். ஏனெனில் நீர்மை வலைத்தளத்தின் நோக்கத்தையும் போட்டிகளை நடாத்துவதற்குரிய காரணத்தையும் போட்டியாளர்கள் நீர்மை வலைத்தளத்தின் இந்த ஜுலை மாதப் போட்டியிலும் எதிர்வரும் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு முன்னர் அறிந்து கொள்வது அவசியம். அறிந்து கொள்ள இந்த லிங்கில் பிரவேசியுங்கள் https://neermai.com/நீர்மையில்-எழுத்தாளர்கள/ 

நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலவித விமர்சனங்களையும் தெரிவு தொடர்பிலும் சந்தேகங்களை முன்வைத்திருந்தார்கள். நாங்கள்  உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த நடுவர்களாக வாசகர்களையே பார்க்கின்றோம். அதனாலேயே முதல் கட்டத் தேர்வில் வாசகர்கள் தெரிவை கவனிக்கின்றோம். இதில் எந்த ஒரு படைப்பாளரும் ஆரம்பத்தில் அறிமுகமானவரா அல்லது புதிய எழுத்தாளரா, எழுத்தாளர்களுக்கு பின்புலம் உள்ளதா என்பதை நீர்மைக்குழு வெற்றியாளர்களை தெரிவு செய்தல் தொடர்பில் கருதாது என்பதனையும் போட்டியாளர்கள் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியம். இதனாலேயே போட்டிக்குரிய வெற்றியாளர் தெரிவு தொடர்பில் இத்தகைய நிபந்தனைகளை நீர்மை வலைத்தளம் கொண்டுள்ளது

போட்டியில் யார் பங்குபற்ற முடியும்?

18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் பங்குபற்ற முடியும். (நீர்மை வலைத்தளத்தில் கணக்கு இல்லாத நபர்கள் முதலில் இந்த https://neermai.com/register/ இணைப்பை பயன்படுத்தி ஓர் எழுத்தாளராக பதிவு செய்து கொண்ட பின்னர் போட்டிக்குரிய படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும்.) உதவி தேவையாயின் நேரடியாக அல்லது வாட்சப் மூலமாக உடன் அழையுங்கள் +9476 266 0 466

எவ்வாறு போட்டிக்கு கதைகளை சமர்ப்பிப்பது?

இந்த இணைப்பை https://neermai.com/உள்-நுழை/ தொடர்வதன் மூலம் உங்கள் கணக்கில் நுழைந்து உங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்க முடியும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பை சமர்ப்பிப்பதாயின் தனித்தனியே ஒவ்வொரு படைப்புக்களையும் பதிவிடுதல் அவசியம். படைப்புக்களை சமர்ப்பிக்கும் போது ‘போட்டிகள்’ பகுதியில் பிரவேசித்து ‘கதை – ஜுலை 2020’ என்பதை தெரிவு செய்து கொள்ளல் வேண்டும் அல்லது உதவி தேவையாயின் நேரடியாக அல்லது வாட்சப் மூலமாக உடன் அழையுங்கள் +9476 266 0 466

போட்டி தொடர்பில் நீர்மையின் முடிவே இறுதியானதாகும்.
மேலதிக விபரங்களுக்கு : +9476 266 0 466 | contact@neermai.com

சிறந்த படைப்புக்களை படைத்து வெற்றியாளராகுங்கள்! வாழ்த்துக்கள்!

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments