குறிச்சொல்: தமிழ்
தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!
என் பிஞ்சுக்கால்
உன்
நெஞ்சுக் குழியை
எட்டி உதைக்கும்
போதெல்லாம்
தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!!
என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே..
என் சுவனத்தின் இருப்பிடமே..
என் பாசத்தின் பெருநிலமே..!!
காணக்கிடைக்கா பொக்கிஷத்தை
கைநழுவி விட்ட துயர்
உறைவிடமாய் மனை முழுதும் நிறைந்திருக்க ...
விம்மியழும் மனதிற்கு
வேறெதுவும் ஆறுதலில்லை உன்னைத்தவிர...!!
மறக்கவும் முடியுமா...
கனவுகளில் வாழ்பவள்
கொழுந்தெனச் சிரிக்கிறாள்
தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள்
அத்தனை ஏக்கத்தையும்
ஒரு புன்னகையில் மறைக்கிறாள்
மங்களகரமாய் இருக்கிறாள்
இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள்
துளித் துளியாய் வடியும் வியர்வையையும்
அட்டை குடித்து மீந்த குருதியையும்
தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள்
விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில்
தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள்
பார்வையில்...
வாழ்ந்திடு மனிதா…
நிறைபொருள்
இல்லை...
நிலையற்ற
இவ்வாழ்வில்...
நிறைவாக
தேடிடு...
நிலையான
உனை மட்டும்...
கவலைகள்
தடையல்ல...
கண்ணீரும்
மருந்தல்ல...
கலங்காமல்
வாழ்ந்திடு...
கரைகள்
சேர்ந்திட...
நேற்றைய
விதிகள் யாவும்...
நாளைய
உரங்கள் ஆகும்...
இன்றே
வென்றிடு...
இனிதொரு
உலகம் செய்திடு...
திருப்பங்கள்
உண்டு
உன் வாழ்விலும்...
பிழைகள்
திருத்தி
நீ வாழ்ந்தால்...
திருந்தி வாழ்ந்திடு...
விரும்பி வாழ்ந்திடு...
வாழ்ந்திடு மனிதா...
வாழ்க்கை
உனக்கானதாகும்...