குறிச்சொல்: neermai.com
மழைவரக்கூடும்
மழைவரக்கூடும் என்றதும்
மண்வாசணையை முந்திக்கொண்டு
மொட்டைமாடித் துணிகளின்
ஈரநெடியே முதலில் மனதை
வந்தடைகிறது
யாரோ ஒருவர்,
தனிமையின் பிடியில் தவிக்கும்
வயோதிக நோயாளியின்
சந்திப்பை தள்ளிப்போடுகிறார்.
மூக்கின் மேல் விழுந்த
முதல்துளியை மட்டும்
சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு
சுமையோடு வீடுதிரும்புகிறாள்
நடைபாதையில் காய்கறி விற்கும்
கூன் கிழவியொருத்தி.
அதுவரை காலியாக இருந்த
பாத்திரங்களெல்லாம்
இந்த வருடத்தில் முதன்...
~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~
வானிலிருந்து எது விழுந்தாலும்,
எம் கோழிகள்
நனைந்த செத்தையில்
கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும்
தன் குஞ்சுகளையும்,
சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும்
இழுத்து இறக்கைக்குள்
காத்துக்கொள்ளும்..
சில நேரங்களில்
குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து
தப்பிய கரையான்களுக்கு
வானிலிருந்து
குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்!
சிலநாட்கள் கழித்து
இடிபாடுகளுக்குள்
கரையான்கள்
கோழிக்குஞ்சுகளின்
இரத்தம் தோய்ந்த
சிதறிய கண்களை
வெறியுடன் பழிதீர்க்கும்!
கரையான்களுடன்
எந்த...
ஆயிரங்களின் அன்னை
பிரையோபில்லம்- Bryphyllum daigremontianum (synonym-Kalanchoe daigremontiana ) ஒருசதைப்பற்றுள்ள, கிரேசுலேசியே (Crassulaceae) குடும்பத்தைச்சேர்ந்த தாவரம். மடகாஸ்கரை பிறப்பிடமாககொண்ட இது ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது....
சந்தித்த வேளை
நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு மாவட்டங்களிலிருந்து வரும்...
நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி!!
சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்...!!!
நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது.
வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது.
இதுவரை எழுத்தாளர்களுக்கான பல்வேறு போட்டிகளை நீர்மை வலைத்தளம் நடாத்தி வருவது யாவரும்...
மதுவின் கவிமழை பாகம்-1
புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1
வகை : கவிதைத் தொகுதி
எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன்
இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும்...
தனிமை
வாழ்க்கையில் தனிமையில்
இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால்
நம்முடன் இறுதி வரை
யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை....!!!
அருகில் இருந்தும்
போலியாக நடிக்கும்
உறவுகளுடன் இருப்பதை விட
தனிமையில் மட்டும் இருப்பது மேலானது அதுவே நிம்மதி தரும்.
தனிமையின்
வேதனையையும் வலியையும்
உணர்வதற்கு...
நாளைய கனவு
உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!!
உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!!
என்றோ ஒரு நாள் நீ கண்ட கனவுநீ எதிர்பாராமலேயே நிஜமாகும் போது...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28
தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள் பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள், ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்தனர்....
காகிதக் கிறுக்கல்கள்
புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள்
வகை : கவிதைத் தொகுதி
எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன்
இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக்...