குறிச்சொல்: rain poems
ஜில்லுக்கட்டி
இந்த சாலை
இந்த வெளிச்சம்
இந்த நீ
இந்த நான்
இதே உலகம்
எதுவும் மாறவில்லை
ஆனால் அத்தனையையும்
இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே
அது மட்டும் எப்படி
கொண்டாடலாம் வா
மழை ஒரு ராட்சசன்
அள்ள அள்ளத் தீராத ராட்சசன்
தேகங்கள் ஒரு இறகென
முன்னிரண்டு கால் விரலில்...