குறிச்சொல்: tamil kavithaihal
ஒரு மௌனம் சபித்தால்…
விறகாகிப் போன மரத்தை
வட்டமிட்டுத் தேன்
தேடும் வண்டாய்
காலக் கடத்தல்கள்
தேவைதானா?
இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சான
தேவையற்ற உங்கள்
நலன் விசாரிப்புக்களை
விரல்களால் அவிழ்ந்து விட்டு,
காத்திருந்து
எனை வசைபாடுதலும்
நியாயம் தானா?
என் வீட்டு முற்றத்தில்
நட்சத்திரப் புள்ளிமான்
விளையாடும் போது,
கானகத்து நரிகளோடு
காலக் கழிப்பெதற்கு ?
என் சொற்கள்
அக்னியை உரிமைகொள்ளும்
விசமங்களை சேகரிக்காதே,
தொலைவில்...
தேடல்
அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும்
தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச்...
தீக்குளிக்கும் தியாகிகள்
கனத்தெரியும் செந்தீயில்
குளித்தெழுந்தாலும்....
தங்கத்துக்கு மட்டும் ஏனோ
தீக்காயங்கள் குறைவதேயில்லை!
சுரங்கம் தோண்டி புதையல்
தேடும் ஆர்வமாய்
மனதைத் தோண்டி
முள்முள்ளாய்த் தைக்கின்றன
தத்துவ நெருஞ்சிகள்...
இயல்பாய் தான் அளித்த
வாக்குமூலங்கள்
முனை முறிந்த
தராசில் நிறுக்கப்பட்டு
அனல்வாரி இறைக்க......
சிரசில் அணிந்த
நெருப்புக்கீரிடமாய்
நின்று எரிகிறது
தாகம் தணித்த நீர்வெளி,
பாறையாய் இறுகி
தன் புதைவை
சிறையிலடைக்குது
கல்பீடமென...!!!
கனவு…..
வெயில் காலத்திலுள்ள
கானல் நீரை போல
ஏமாற்றிச் செல்லவா
வந்தாய் என் துயிலில்
ஏமாற்ற வந்தாலும்
என் இரவில்
பல சந்தோஷம்
தந்தாய் என் மனதில்
என் இமைகளை
மூடிய பின்
நுழைந்தாய் என்
அறைக்குள் அனுமதியின்றி
மறு இமை
திறக்க முன்
சிதறிச் சென்றாய்
எவ்வித நனவுமின்றி
கண்டேன் பல இன்பங்களை
ரசித்தேன்
வாழ்வின் சுகங்களை
ஏனோ அறியாமல்...
எனக்காய் நீ வேண்டும்
ஆண் என்ற வைராக்கியத்துக்குள்
அதிகாரம் செய்ய நினைக்காமல்
ஆயுள் முழுக்க இறை வழியில்
அன்பு செய்யும் ஆளுமையாளனாய்
நீ வேண்டும்..
என் கடமை அனைத்திலும்
உனக்கும் பங்கு உண்டு என்று
சமையலறையிலும் பங்கு கொள்ளும்
பண்பான பங்காளனாய் நீ வேண்டும்...
என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும்
மாற்றுக் கருத்தின்றி...
கவினுறு காலை
அறுசீர் விருத்தம் (மரபுப் பா)
செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே!
பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்...
வாய் திறந்த அக் கால கொல்லன்….
என் காயத்தை வருத்தி
வியர்வையால் நீராடி
வயிற்றுப் பசியை போக்க
இரும்பை வடிவமைக்கின்றேன்
காலையில் எழுந்து
இறைவனை வணங்கி
என்னவளின் முகம் தழுவி
தல வேலையை ஆரம்பிக்கின்றேன்
உடல் பலம் கொண்டு
வீர வேந்தன் நாட்டை காக்க
நுண்ணறிவை கொண்டு
வீர வாள் நிர்மானித்தேன்
புவித்தாயுடன் போராடி
பயிர்ச் செய்யும் தெய்வத்திற்கு
அறுவடை...
பெண்ணடிமைப் பேதமொழிப்போம்
கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம்
சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம்
ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை...
வாழ்க்கை
காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது
தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க
இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி
மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க வைக்கிறதுஅதுவரைதான்...