குறிச்சொல்: Tamil poems
இரு பார்வைகளின் கதை..
பார்வைகள் மாறியது ஏன்?
பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள்
மாறியது ஏன்??
உன் பார்வையில் நானோ!!!
தொலைதூரம் பயணிக்கும்
ஓர் உயிர் ஆவேன்... என்னுள்..
உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே
கிறுக்கப்பட்டிருக்கும்..
நினைவுகள் எனும் இறுதி வேரும்
மறதியை எட்டத்தொடங்கியிருக்கும்..
காயங்கள் எனும் கேள்விகளிற்கு
நேரமே பதிலாய் கிடைத்திருக்கும்..
உன்...
உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!
தாய் எனும் சுடர் அணைந்ததிலிருந்து
தன்னையே அர்ப்பணித்து
தனக்காய் ஏதுமின்றி-என்னை
தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!!
துன்பங்கள் பல வந்த போதும்
துணையாய் நின்று கொண்டாய்-நீ
ஆறுதல்கள் பல கூறி-அன்பால்
என்னை அரவணைப்பாய்..
ஓலைக்கிடுகில் வேலியும்
இடை இடையே பூவரசமும்
காண்பதற்கே அழகு சொக்கும்-பார்ப்போர்
கண்குளிர பார்த்து நிற்கும்..
கரும்பின்...
என் தோழி
ஏனடி இவ்வளவு தாமதம்
கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி..
நீ விட்டு சென்ற நொடி முதல்...
வற்றியது கண்ணீர் மட்டுமல்ல..
உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்...
நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு தந்தாயெடி..
மூன்று வேளையும் சரியாக...
பொம்மை..
சாயும் மாலைப்பொழுதினிலே
சாலை ஓரம் வண்டி நிற்க
சக்கரமும் ஓடவில்லை
சாரதியும் என் அருகிலில்லை..
கார்க்கதவை திறந்து கொண்டு
சிறு தூரம் நான் நடக்க
சில்லென்ற காற்றோடு
சிரிப்பொலியும் சேர்ந்திருக்க
சிதறியடித்துக்கொண்டு ஓடினாள்
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி..
அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட
அவள் பின்னே நான் ஓட
அரண்ட...
வறுமையின் ஓலம்..
எண்ணற்ற உயிர்களைக் குடித்தும்
அடங்கா கிருமியே..
இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்?
மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்?
என் தந்தையை இழந்த ஓலம்
கேட்கவில்லையா..
தாயை இழந்த கதறல்
கேட்கவில்லையா..
இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன்
குடி கொண்ட பூமியில் தானே..
இரக்கமுள்ள வறியனும் கிடந்து துடிக்கிறான்..
உன்னால் இறப்பதும் கொடுமை...
வறுமையால் வயிர்...
முதுமையில் தனிமை
மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம்
உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள்...
பிரமித்துப் போகிறேன்
பிரமித்துப் போகிறேன்
வளர்ந்து கொண்டேயிருக்கும் வான்வெளியை
வகைவகையாய் கண்களால் அளவாதவர்களைப் பார்த்து
பிரமித்துப் போகிறேன்
கட்டில்லா காலவோட்டத்தில் பயணித்துக்கொண்டே
கடுகளவும் வரலாறு அறியாதவர்களைப் பார்த்து
பிரமித்துப் போகிறேன்
புத்தகங்களின் உலகின் இதுவரை
புகுந்திராதவர்களைப் பார்த்து
பிரமித்துப் போகிறேன்
ஆடியோயப்போகும் வாழ்வை
அதன் பாட்டில் வாழ்பவர்களைப் பார்த்து
பிரமித்துப் போகிறேன்
கம்யூனிசம் போன்ற...
இரவு
நெடுநேரம் ஆடியோந்தவந்த அரங்கத்தில்
நுழைந்து கொண்டிருக்கிறாள்- அவள்
வருகையினை முன்னமே அறிந்தவையாய்
வாடலை முகழுழுக்கவப்பிக் கொண்ட
தினப்பூக்களை எள்ளி நகையாடிக்கொண்டனவையாய்
மணத்தாலேயே மதிகலங்க வேண்டி
போதை தருவித்த மல்லியையும் முல்லையையும்
பேதை நானோ சாளரவோரமாய் சல்லாபித்துக் கொண்டே
சலனப்படும் இராப்பொழுதுகளின் வனப்பை
சபதமிட்டுக் கூறிக்கொள்கிறேனிது இந்திரலோகமென்று
தன்...
உன்னதப் படைப்பு
இளமைக் காலமது
இருபது வயதினிலே
குடும்பச்சுமை தனை தோளில் சுமந்த
இளைஞன் இவன் அன்று
தேசம் விட்டு தேசம்
கண்டம் விட்டு கண்டம்
சுற்றுப்பயணம் செல்லவில்லை
சுகபோக வாழ்க்கை வாழவுமில்லை
அறிமுகமில்லா மனிதர்கள்
பேச மொழி தெரியவில்லை
நான்கறைச்சுவரில் ஓர் வாழ்க்கை
மணிக்கணக்கில் மகிழ்ந்து பேச
இன்று போல் அன்று...