குறிச்சொல்: Tamil poems
தண்டவாளங்கள்
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...
நேசத்தின் கதவடைப்பு
அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும்...
நினைவுகளின் மீட்சி
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து...
வாழ்ந்து பார்
கனவுகளும் காயங்களும்இரண்டற கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள் வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று துவண்டு விடாதே!உன் நம்பிக்கையை துடுப்பாய்...
நீ என்றால்………….
நீ மேகம் என்றால்
நான் மழை ஆகின்றேன்
நீ மழை என்றால் - அதில் நான்
நனைந்திடுவேன்
நீ உயிர் என்றால்
நான் உடல் ஆகின்றேன்
நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்
(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது)
கனவு காண்பதற்கே
கஞ்சப்படும் உலகினிலே
தினமும்
தன் சிறகை விரித்து
கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி..
'கனவுகள் என்றும் கலையாது
தன் பயணம்
இலக்கை நோக்கியதாக இருக்கும் போது'
என்கிறது அக்குருவி...
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
எப்போதும் பருந்தாகாது
எனக்...
வேண்டாமே வெளிநாடு!
கடவுளே...!
நீரென்று நெருப்பள்ளி
உடல் தடவிக்கொள்கிறேன்
பூவென்று புகையள்ளி
தலை சூடிக்கொள்கிறேன்
கண்ணுக்கு மையென்று
கரி பூசிக்கொள்கிறேன்
காலுக்குக் கொலுசென்று
சங்கிலி மாட்டிக்கொள்கிறேன்
இன்னும்,
ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன்
தவிப்பைப் போர்வையாக
நான் போர்த்திக்கொள்கிறேன்
கண்களைக் குளமாக்கி
நானீந்திக்கொள்கிறேன்
கண்ணீரை அமுதாக்கி
நானருந்திக்கொள்கிறேன்
இன்னும்
இன்னும்,
என் கணவன் துணையின்றி
ஜடமாக வாழ்கின்றேன்
எல்லையற்ற சோகங்களில்
என்னாட்களை கடக்கிறேன்
என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி
அகமகிழ்ந்து கொள்கிறேன்
நாட்காட்டியை...
கிராமம் என்றால் இழிவில்லை!
கிராமம் என்றால்
இழிவில்லை
இயற்கையின் இருப்பிடம்
ஊஞ்சல் கட்டி ஆடும்
தென்றலில்
ஒவ்வொரு முறையும்
உறைந்து போகலாம்
பச்சை வயலுடுத்தும்
பாவாடையின் கரையில்
பகல் இரவாக
படுத்துறங்கலாம்
நிலவைக்கட்டி இழுத்து
திண்ணையின் மடியில்
அமரச் செய்து
சோறூட்டலாம்
பஞ்சு மெத்தையின் சுகத்தை
மணலில்
உருண்டு புரண்டு
உடல் முழுதும் அனுபவிக்கலாம்
வகை வகையாக வர்ணம்
பூசத் தேவையில்லை
வானவில் அங்கேதான்
குடியிருக்கும்
வாரந்தோரும்
குளிப்பாட்டத் தேவையில்லை
வான்மழை அங்கேதான்
ஊற்றெடுக்கும்
வாழ்ந்து...
என் கண்ணம்மா
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல'
இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல
பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...
கார்காலப்பொழுதுகள்
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...