29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

நீ-நான்

0
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

தனிமை

0
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!

விருப்பப் பாடல்

0
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...

காதல் கடிதம்

0
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன் 

நீ  என்ற ஒற்றைச்சொல்

0
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும் என்...

வாழ்ந்திடு மனிதா…

0
நிறைபொருள்  இல்லை... நிலையற்ற  இவ்வாழ்வில்... நிறைவாக  தேடிடு... நிலையான உனை மட்டும்... கவலைகள் தடையல்ல... கண்ணீரும்  மருந்தல்ல... கலங்காமல் வாழ்ந்திடு... கரைகள் சேர்ந்திட... நேற்றைய விதிகள் யாவும்... நாளைய  உரங்கள் ஆகும்... இன்றே வென்றிடு... இனிதொரு உலகம் செய்திடு... திருப்பங்கள் உண்டு உன் வாழ்விலும்... பிழைகள்  திருத்தி  நீ வாழ்ந்தால்... திருந்தி வாழ்ந்திடு... விரும்பி வாழ்ந்திடு... வாழ்ந்திடு மனிதா... வாழ்க்கை  உனக்கானதாகும்...  

நாளையும் விடியுமா…??

0
இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய விழிகளில்  முழுவதும் கற்பனையாய் நாளைய விடியலில் நிம்மதி கிட்டுமோ என மின்னும் உடுவுடன் ஓசைகளற்ற பேச்சுடன் மணி முள்ளும் நிமிட முள்ளும் போட்டி போட்டு சுழன் றோட இன்றும் விடியவில்லை என்ற ஏக்கத்தோடு மறு ஒரு நாள் கழிக்கிறேன்....

உன் நினைவோடு நான் இங்கே…

0
இமையிரண்டும் மூடுகையில் கனப்பொழுது என்றாலும் இரவென்றும் பாராமல் கனவாக வந்தாயே, நீ அன்பே! இன்னொரு முறை பார்க்க கண்கள் தான் ஏங்கவேஇதழ் ஓர சிரிப்போடு நீகண்ணெதிரே வந்தாயே, என் அன்பே! இசைப்பிரியன் நான் என்றும்கதை பலவும் தான் சொன்னேன் இளமை என்ற ஒன்றென்ன கனமாக...

உலா

0
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன  மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை  பேசித் தீர்க்க நிறையவே இருந்தாலும் சுயநலத்தை விடவும் சிறந்த ஒன்றைப் பற்றி விவாதிக்க எனக்குத் தெரியவில்லை  ஒரு முத்தத்தோடே முடிந்து விடக் கூடியதுதான் காதல் என்கையில் கோர்த்திருக்கும் விரல்களை உருவிக் கொள்ளவும் சில...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!