குறிச்சொல்: tamil website
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27
தொடர் போரினால் நலிந்த ஈராக்
திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.
ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும், உணவுக்கூடத்திற்கும் சில மீட்டர்கள் தள்ளியே...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26
சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக் அல்லது பெப்ஸி...
நிமிடக் கதைகளுக்கான போட்டி!
கதை மாந்தர்களே,
நீர்மை வலைத்தளத்தின் நிமிடங்களில் கதை சொல்வதற்கான 'நிமிடக் கதை 2020' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 01.01.2021வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24
உண்ணி கிருஷ்ணன்
முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள மணலின் நிறத்திலேயே இருக்கிறது. பாலை...
மாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்!!
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சமயங்களும் கல்வி கற்பது ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கின்றது....
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23
முகாமில் நடந்த விருந்து
கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை. அக்டோபர் மாதம்...
அடுத்தது!?
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில்...
சாளரம்
புதிதாய் பூத்ததொரு சாளரம்
ஏன் இத்தனை பிம்பங்கள்
பிரம்மையாகக் கூட இருக்கலாம்
இல்லை இது என்னறைதான்
சூரியனைக் காணவில்லை
வெண்பனி ஓயவில்லை
இடைக்கிடை சிறு சலனம்
திடீரென மௌனம்
மீண்டும் பார்க்கிறேன்
தூரமாக அதே மரங்கள்
சிறகு விரிக்கும் பட்ஷிகள்
ஆனால் ஒரு பாதை தானே
சகதியின் மேலாக இருகிச்
செல்லும்...