Whoever stays or leaves I will be there for you!!

0
639

 

 

 

சில வாசகங்கள் மனதில் பதிந்து விடும். காலத்திற்கும் அழியாது. அவை ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் கஷ்டப்பட்டு ஒரு சில காரணங்களை தேடிச் சொல்லலாம். அப்படித்தான் இதுவும்..!

  • நான் உன்னை விட்டுப்பிரிவதுமில்லை
    உன்னை கைவிடுவதுமில்லை
  •  Whoever stays or leaves I will be there for you

இவை இரண்டும் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. நமக்கு பரிச்சயமான உறவுகளில் பிணைந்து போன நேசத்துக்குரியவர்கள் உங்கள் காதுகளில் முணுமுணுக்கலாம். ஆனால் இதை நான் எனக்கே சொல்லிக்கொள்கிறேன். ஆம் நீங்கள் யாருடைய நேசத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். தெகிட்டுகிறது என தள்ளியும் நிற்கலாம். ஆனால் சுய காதல் என்பதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. அதனால்தான் நமக்கு பிடித்த ஆடைகளை அணிகிறோம். குறைந்த / கூடிய பட்சம் என அலங்கரித்துக் கொள்கிறோம். சுய ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்கிறோம். நம் ஆரோக்கியம் சிறிது நழுவும் போது அதிக துயரம் கொள்கிறோம்.

தன்னை நேசிக்கும் மனிதரால் மாத்திரமே பிறரை கூர்ந்து கவனிக்க முடியும் என்பது என் வாதம். ஏனெனில் தனக்கு பிடிக்காத ஒரு விடயம் திணிக்கப்டும் போது நாம் எப்படி சகித்துக்கொள்கிறோம், தனக்குப் பொருந்தாத விடயங்களில் எவ்வாறு அட்ஜெஸ்ட் செய்கிறோம், நம் அன்புக்குரியவர்களின் புறக்கணிப்புகளை அலட்சியங்களை எவ்வாறு ஒரு இடைவெளியில் கடந்து சாதாரணமாய் மீளவும் அன்பு செலுத்துகிறோம், மன்னிக்கிறோம், கோபப்படுகிறோம், அலட்சியம் செய்கிறோம் என்பதெல்லாம் நம்மை நாமே சுய பரிசோதனைக்குட்படுத்த எடுக்கும் சில உதாரணங்கள். இவை நம்மின் இயல்புகளை உற்று நோக்கச் செய்கிறது. அதிக கவனம் குவித்து பிறரை மதிப்பிட வைக்கிறது. அவர்கள் ஸ்தானத்தில் நம்மை வைத்து பொறுமை காக்கச்செய்கிறது. அவர்களின் இயல்பு மற்றும் விதி மாறல்களை பொறுமையாக எடுத்துக் கொள்ள முடிகிறது. தன் வலி உணர்ந்தவன் பிறர் வலியை எளிதில் புரிந்து கொள்வான். அவ்வளவுதான்!

இவ்வாறு அனைத்தையும் அனைவரையும் பாஸிடிவ் நெகடிவ் என்ற சிறு சிறு எல்லைகளுக்கப்பால் மனது தள்ளி வைத்தாலும் பூரணமாக நம்பிக்கை வைக்கக் கூடிய, எது நடந்தாலும் நான் இருக்கேனு நம்ம மனதுக்கே தெம்பூட்டக்கூடிய, ஆறுதலை சொல்ல எத்தனையோ பேர் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். ஆனா எப்போதும் நான் இருப்பேனு நம்ம மனசுக்கு நாம சொல்லிக் கொள்வதில் எந்தவித தப்புமேயில்லை…அதனால்தான் ஒருசில வாசகங்களை ஒருசில வரிகளை பார்க்கும் போது அப்படியே கொடி கொழுகொம்பைப் பற்றுவது போல மனது விடாமல் பற்றிக் கொள்கிறது. எத்தனை தூரம் பறந்தாலும் எவ்வளவு உயரத்திலிருந்து தடுக்கி விழுந்தாலும் எத்தனை எச்சில்கள் முகத்தின் மீது உமிழப்பட்டாலும் சரிதான் வர்றது வரட்டும்னு அத்தனையும் கடந்து நம்ம லைபை நாம லீட் பண்ணுவோம்னு கொண்டாடும் ஒவ்வொரு மனசுக்கும் சல்யூட் அன்ட் சபாஷ்னு சொல்லி போய்ட்டே இருக்கணும்.. அவ்வளவுதான்..

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments