பீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா?

0
807

 

 

 

 

இத்தாலிய உணவான பீட்சாவை (Pizza) உண்பதில் யாருக்குதான் விருப்பமிருக்காது? இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பீட்சாவை நீங்கள் டேக் அவே (Take away) அல்லது டோர் டெலிவரி (Door Delivery) செய்யும் போது சிறிய வெள்ளை நிற பிளாஸ்டிக் மேசை (white table) எதற்கு வைக்கப்படுகின்றது என உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பீட்சாவை இலகுவாக பிரித்து உண்பதற்கு என நினைத்தால் அது தவறு. வாருங்கள் காரணத்தை அறிவோம்…!

அந்த சிறிய ‘மேசை’ உண்மையில் பீட்சா சேவர் (Pizza Server) என்று அழைக்கப்படுகிறது. இது பீட்சாவின் நடுப்பகுதிலேயே பொதுவாக வைக்கப்படும். இதற்கான உண்மையான காரணம் நாம் ஓடர் செய்யும் பீட்சா பெட்டியில் அடைக்கப்பட்டே நமக்கு டோர் டெலிவரியின் போது அல்லது டேக் அவேயின் போது தரப்படும். அப்போது பீட்சா பெட்டியுடன் சீஸ் தூவப்பட்ட பீட்சா ஒட்டிக் கொள்ளாமல் இருக்கவே இந்த பீட்சா சேவர் வைக்கப்படுகின்றது. பீட்சா டெலிவரியின் போது போக்குவரத்து செய்ய வேண்டி வருவதால் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். அப்போது அவை சரிந்து விழுந்து ஒட்டிக் கொள்ளாமல் இருக்கவே இந்த சிறிய மேசை பீட்சாவின் மையப்பகுதியில் வைக்கப்படுகின்றது.

சரி இந்த பீட்சா மேசை எவ்வாறு கண்டுபிக்கப்பட்டது எனத் தெரியுமா?

முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கார்மேலா விட்டேல் என்ற பெண் பீட்சா பிரியர்களுக்கு எல்லா காலத்திலும் பயன்படுத்தக்கூடிய படைப்பு ஒன்றை அறிமுகம் செய்தார். அதுவே பீட்சா மேசை (pizza table) பீட்சா சேவர், பீட்சா ஒட்டோமான் (pizza ottoman) அல்லது பீட்சா நிப்பிள் (pizza nipple) என்றும் குறிப்பிடப்படுகிறது.

சிறுவயதில் நம்மில் பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ‘இந்த பீட்சா பை மையத்தில் ஒரு சிறிய மூன்று கால் பிளாஸ்டிக் மேசை ஏன் இருக்கிறது? நாற்காலிகள் எங்கே? மக்கள் எங்கே உள்ளனர்?’ என சிறு பருவத்தில் ஆச்சரியப்பட்டது இப்போதும் நினைவிருக்கிறது. இப்போதும் இவ்வாறு சிந்திக்கும், ஆச்சர்யப்படும் நம் குழந்தைகளுக்கு இனி உங்களால் சொல்ல முடியும் என நம்புகின்றேன்.

இந்த கட்டுரை 02 நாட்களுக்கு முன் பீட்சா சாப்பிடும் போது பதிவிட வேண்டும் எனத்தோன்றியது. இக்கட்டுரை பிடித்திருந்தால் பகிருங்கள்

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments