என்னவளுக்காக நான்

0
2310

கர்ணணுக்கு- துரியோதன் உலக நட்புக்கு இலக்கணமாம்
ஆனால் எனக்கு-அவளோ
என் உயிர் நட்புக்கு இலக்கணமாவாள்

தாயுடன் நடை பழகிய நாள்
என் நினைவில் இல்லை
காரணம்
ஒரு கட்டத்தில் நான் சுய நடை பயில
கற்றுக்கொண்டேன்
ஆனால்
அவளுடன் நடை பயின்ற நாள்
இன்றும் “பசுமரத்தாணி போல்”
என் நெஞ்சில் பசுமையாக உள்ளது
ஏனெனில் அவளின்றி நகராது
என் கால்கள் காலங்கள் உருண்டோடி விட்டன
ஆனாலும் என்னால் அவளின்றி
சுய நடை பழக முடியவில்லை
அவள் என் உயிரின் பாதி

பாலர் வகுப்பில் ஒரு நாள்
ஒரு பென்சிலுக்காய் நாங்கள்
சண்டையிட்டு பிரிந்திருந்தோம்
மூன்று நாட்கள்  பேசவில்லை,
கண்டாலே முகத்தை திருப்பிக் கொள்வோம்
அதுதான் எங்கள் முதல் சண்டை,
முதல் சந்திப்பு
அன்று முதல் எங்கள் பயணம்
மோதலுடன் மலர்ந்தது…..

ஆனால் அவளுடனான மோதல்
என்னை என்னவோ செய்தது
எத்தனையோ பேர்
என்னுடன் பேசினாலும் என்னை பார்த்தாலே
வெட்டிக் கொண்டு செல்லும்
அவளைத்தான் நான் அதிகம் ரசித்தேன்
இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறேன்..

மூன்று நாட்களின் பின்
அந்த அழிறப்பர் தேய்ந்த பென்சிலை
அவளிடம் கொண்டு போய் நீட்டுகையில்
அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி
இன்றும் எனது காயங்களுக்கு மருந்தாகிறது…..

“இது எனக்கா??
அவள் புன்சிரிப்புடன்
என்னுடன் பேசிய முதல் வார்த்தை
அன்று பேசியவள்தான்
இன்று வரை வாய் மூடாது பேசிக்
கொண்டிருக்கிறாள்

அவளது கேள்விக்கு ஆ
ம் என்ற பதிலுடன்
எங்கள் நட்பு ஆரம்பமானது
பள்ளி,கல்லூரி என எங்கள் பயணம்
விருட்சமாய் வளர்ந்தது……

சில பல சண்டைகள் எம்முள்
சர்வ சாதாரணமாக எழுபவை
ஆனால் எப்போதும் அவளை
சமாதானப்படுத்தும் பொறுப்பு எனக்கானதே

இராட்சசி இறங்கிவர மாட்டாள்
ஆனால் அவளிடம் இறங்கிப் போவது
எனக்கு விருப்பமானதே
எனது சமாதானமும் அவளுக்கு பிடித்ததே…
கோபமே இல்லாத அவள் முகத்தை
கோபமாய் காட்ட முயற்சிக்கும் போது
குழந்தைகள் கூட அவளிடம் தோற்று விடும்…

கல்லூரியில் காண்போரெல்லாம்
காதலா என்ற வினாவை
தொடுக்கும் போதெல்லாம்
அவள் முகத்தில் எந்த கலக்கமும் இருக்காது
எனக்கு வரும் கோபம் கூட
அவளுக்கு வருவது இல்லை

நிதானமாய் பதிலளிப்பாள்
“நாங்கள் நண்பர்கள்
ஆமாம் நாங்கள் நண்பர்கள்
நேற்று,இன்று,நாளை எப்போவும் நாங்கள் நண்பர்களே
எங்கள் வாழ்வில்
ஆயிரம் புது உறவுகள் வரலாம்
ஆனால் எங்கள் உறவு என்றுமே மாறாது
ஆணும்,பெண்ணும் பழகினால்
காதலாகவே பார்த்து
பழகிக் கொண்ட இந்த சமூகம்தான்
அதன் கொள்கையை மாற்ற வேண்டுமே தவிர
நாங்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை……..

அவளது நெற்றியடி பதிலை கேட்டு
ஒரு கணம் நான் கூட
திகைத்துப் போனேன்
ஆனால் தெளிவாகினேன்…..
“நாங்கள் நண்பர்கள்”

எங்களுக்கிடையில்
காதல் இல்லை
காமம் இல்லை
ஆனால் அதையெல்லாம் தாண்டிய
புனிதமான உறவு உள்ளது
அதுதான் நட்பு
காலங்கள் மாறினாலும்
எங்கள் உறவு என்றுமே நிலைத்திருக்கும்
இப் புவி மீது…….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments