காதல்

1
791
inbound7064038305586934559

பூமியில் நாம் அவதரிக்க
பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல்

அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து
அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல்


சண்டைகள் வந்திடினும் சலிக்காமல்
சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப் பாசம் அது காதல்

பள்ளிப் பருவம் முதல் பிரிந்திடா சிந்தையுடன்
ஆறுதல் நமக்களித்த ஆறுயிர் நண்பன் மீது நாம் கொண்ட காதல்

இறைவன் அளித்த வரமென எண்ணி
இயற்கையை ரசித்திடவே நாம் இயற்கை மீது கொண்ட காதல்


கரம் பிடித்த தாரம் அதை – என்றும்
கைவிடவே மாட்டேன் என்ற தாரம் மீது கொண்ட காதல்

தந்தை என்றழைக்க தவமிருந்து பெற்றெடுத்த
தம் பிள்ளை மீது நாம் கொண்ட காதல்

செல்லமாய் கொஞ்சிட நாம் வளர்த்த
செல்லப்பிராணி மீது நாம் கொண்ட காதல்

நம்பிக்கையுடன் புரிந்துணர்வும் ஓங்கி நிற்க
எண்ணங்கள் அலை பாய
எம்மனம் இணைந்திருக்க

நாம் கொண்ட நேசமும்
நாம் ரசிக்கும் ஒவ்வொன்றும் ஒரு வகைக் காதலே………….

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb…