இமையிரண்டும் மூடுகையில்
கனப்பொழுது என்றாலும்
இரவென்றும் பாராமல்
கனவாக வந்தாயே, நீ அன்பே!
இன்னொரு முறை பார்க்க
கண்கள் தான் ஏங்கவே
இதழ் ஓர சிரிப்போடு நீ
கண்ணெதிரே வந்தாயே, என் அன்பே!
இசைப்பிரியன் நான் என்றும்
கதை பலவும் தான் சொன்னேன்
இளமை என்ற ஒன்றென்ன
கனமாக பல வருடம் கடந்தாலும், என் அன்பே!
இருக்கும் இந்த காதல் தான்
கடைசி வரை முதுமையிலும்
இயன்றளவு உன் விருப்பம்
கடைதேற்ற நான் இருப்பேன், என் அன்பே!
இன்றல்ல நேற்றல்ல என்றென்றும்
கடந்து தான் வருவேன், கடல் என்ன?
இந்த மலையும் காடும் தான் என்ன?
களைப்பின்றி உன் நினைவோடு, என் அன்பே!
இங்கு தான் நீ இன்றி நான்,
கண்ணீருடன் இருந்திட கண்மணியே!
இணையற்ற காதலை
கணக்கின்றி தருவாய் எனக்கு, என் அன்பே!
என் துணையாக உன் நினைவோடு காத்திருக்கும் நான்…