உயிரே போகிறாய்……

0
676
IMG-20200710-WA0002

 

 

 

 

 

உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று
ஊர்தேடிப்பெற்றதொன்று
உயிர்கொண்டுபோனதின்று

வினைதேடி வைத்தபின்பு
வேண்டும் ஓர் துணையென்று
மனம்நாடிவந்ததொன்று
உயிர்கொண்டுபோனதின்று

தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்
காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்று
கனவாகிப்போச்சுதின்று……

விழுகையிலே எழுப்பிவிட்டு
விழிநீரைத் துடைத்துவிட்டு
இம்சைகளால் ஆண்டதொன்று
எனைமறந்து போனதின்று….

தேடிவைத்த நினைவுகளை
தெருவினிலே தொலைத்துவிட்டு
திசைதெரியாப் பாதையிலே
போகுதிந்த பேதைப்பொண்ணு…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments