அவள் அங்கே பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது.எங்கும் அழும் சத்தங்கள்,அலறல்களால் அந்த கட்டிடம் முழுதாய் மூடப்பட்டிருந்தது.சற்று நேரம் சஹானாவிற்கு எதுவுமே புரியவில்லை கனவா நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்தாள்.
தரையில்,சுவரில் என பல இடங்களில் இரத்தக்கரைகள் அனைவரினதும் உடைகள் வெள்ளை நிறத்தில் இருந்தன. எதுவும் புரியாமல் என்ன நடக்கின்றது என்று தெரியாமலேயே நின்று கொண்டிருந்தாள் திடிரென அவளது வலது புறத்தில் திரைக்குப் பின்னால் ஒரு பெண் அகோரமாக அழும் சத்தம் கேட்டது.திரையை விலக்கி பார்த்த சஹானாவிற்கு ப(b)யங்கர சொ(sh)க்.அங்கு அவள் பார்த்தது என்னவென்றால் ஒரு சவப்பெட்டியினுள்ளே பெண் ஒருவரின் இரு கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு கொண்டிருந்தன.அப்பெண்ணிண் கைகளினூடாகவும் காலிலிருந்தும் இரத்தம் பீறிட்டு பாய்ந்து கொண்டிருந்தன.அச் சவப்பெட்டி முழுவதும் இரத்தத்தினால் குளிப்பாட்டப்பட்டது.ஆணிகள் அடிக்கப்பட்டதன் பின் ஒரு வெள்ளை நிற துணியினால் அப்பெண்ணிண் உடல் முழுவதும் சுற்றப்ப்ட்டது.அப்பெண் சஹானாவைப் பார்த்து ஹெல்ப்(p) மீ ,ஹெல்ப்(p) மீ என்று கத்த ஆரம்பித்தாள். அவ்வளவு நேரம் மெதுவான குரலில் கத்திக் கொண்டிருந்த பெண் அவளது முகத்தை துணியினால் சுற்றும் பொழுது சஹானாவைப் பார்த்து அகோரமாக கத்தளானாள்.
சஹானாவிற்கு என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை,சித்தம் கலங்கியவள் போலதான் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அத்தனைக்கும் அவளால் எதுவும் செய்ய முடியாது.இங்கிருப்பது அவளுக்கும் பாதுகாப்பு இல்லையென உணர்ந்தவள் உடனே அக் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்தாள்.
இரவு முழுவதும் சரியான வழியைத் தேடி அழைந்தவள் ஒரு வழியாக கண்டுபிடித்து உடன் வந்தவர்களுடன் இணைந்து கொண்டாள்.
இருந்தாலும் அவளுள்ளே விடை தெரியாத பல கேள்விகள் எழுந்தது.யார் நடமாட்டமும் இல்லா இக் காட்டின் உள்ளே இவ்வளவு பெரிய கட்டிடம் எப்படி வந்தது? எதற்காக அங்கே இத்தனை கொடுமைகள்? யார் அவர்கள்? என பல கேள்விகள்.
அவள் பார்த்த விடயங்களை யாரிடமும் அவளாள் சொல்லவும் முடியவில்லை.காரணம் அவளை யாரும் நம்ப மாட்டார்கள் என்பது அவளுக்கு நன்றாக தெரிந்ததே.
மனநிம்மதி தேடி வந்தவளுக்கு தூக்கமும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது காட்டில் அவள் பார்த்த காட்சி இதற்கும் அவளது அதிஷ்டம் தான் காரணமெண தன்னை தானே திட்டியும் கொண்டால் ஒருவித குழப்பத்துடனும் பயத்துடனுமே அவளது சுற்றுலா நாட்கள் நகர்ந்து.ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த மர்மங்களில் அடங்கியுள்ள ரகசியங்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டினாள்.
அதற்கான ஆராய்ச்சிகளை தொடங்கினாள்…..
தொடரும்……