காதல் கடிதம்

1
1639

காதலை கடிதங்களில் பகிர்ந்து கொண்டதுண்டா???
முன்னிரவு முழுதும்
அவன் மீதான காதலை மீட்கிறேன்
என் நினைவுகள் அவனை சுற்றி மட்டுமே
முட்டித் தெறிக்கும் என் காதலை
வெளிப்படுத்த அன்று என்னிடம்


கைபேசி இருந்திருக்கவில்லை
சட்டென்று எண்ணங்களை வடிக்க எண்ணி
வெள்ளை கடதாசியையும்
நிறப்பேனாக்களையும் தவிர……
என் அன்புக் காதலா…..
எனத் தொடங்கி உன் அன்பு மனைவி….
வரை பல பக்கங்களில்
கிறுக்கி தள்ளிய
காதல் கிறுக்கி நான் ……
ஆங்காங்கே வண்ணப் பேனாக்களால்
வண்ணமயமாகியது என் காதல்….

ஆங்காங்கே வரையப்பட்ட இதயங்கள் கூட
எனையும் ஓர் ஓவியனாக்கியது…..
காதல் காவியத்தை எழுதி முடித்து விட்டு
உங்கள் பதிலுக்காய் காத்திருக்கிறேன்…
என முடித்துவிட்டு மடலை அழகாய் மூடி
என் புத்தகத்தினுள் ஒழித்துக் கொண்டேன்…..

நாளை காலை அதனை உனதாக்கும் வரை
என் மனம் கனத்தது……
ஒருவாறு யாருமறியா வேளைதனில்
உனதாக்கிவிட்டு ஒரு பார்வை பார்த்திருப்பேன்….
உணர்ந்திருப்பான் அவன் ….
நான் பதிலுக்காய் ஏங்கியதை……
செக்கன்கள் நாட்களாகிய பின்
அவனிடமிருந்து மடல்…..
நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும்
அழகாய் பதிலளித்தான்…
மீண்டும் மீண்டும் வாசித்து
மீட்டுகிறேன் என் காதலை…….

என் பொக்கிசப் பெட்டகத்தில்
சேமித்து இன்றும் உன் நினைவை மீட்டுகின்றன ….
எத்தனை தொலைபேசிகள் வந்தாலும்
எவ்வளவு வேகமாய் காதலை பகிர்ந்து கொண்டாலும்….
காத்திருப்பும் காதலும் ஓர் சுகம் தான்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments