சருகுகள் சாலையோரம்
கிடக்கின்றன
ஓடுகின்ற கால் தடங்கள்
ஓயவில்லை – உனை
உந்தி மிதித்தோர் எண்ணிக்கை
உரைப்பதற்கில்லை
மழைக்கு குடை பிடிப்போர்
மத்தியிலே – நீ
மண் புழுதி குடிப்பது
மறுப்பதற்கில்லை
இரவுக்கு பகலொன்று
விடிகையிலே – நீ
எவர்க்கும் ஓர் பொருட்டாய்த்
தெரிவதில்லை
கிளைக்கு உறவருத்து
வீழ்ந்த பின்னே
மண் தரைக்குள் மக்கிப் போவாய்
மாற்றமில்லை
ஓப்புமை உரைக்கில் உண்மையிது
சில பொழுதுகளில்
மானிட மனிதம் மதிகெட்டு
உனைப்போல் தான்
சருகுகளாய்ச் சாலையோரம்
கிடக்கின்றது