நான் மகாகவி

0
283
4083672_0-33893438
யார் மகாகவி?

முண்டாசு சிரம் கட்டி
முறுக்கு மீசை மிரட்டி உருட்ட
புருவமுயர்ந்த கூர் கண்கள்
அநீதிகளுக்கு அக்கினி மூட்ட
கறுப்பு அங்கி மேலுடுத்து
பருவம் தெரியா உருவமாய்
பார்ப்போரை அஞ்ச வைக்கும்
இப் பாரதியை அறிந்ததுண்டோ?

தமிழ் என் உயிர் மூச்சு – என்றும்
தளராது என் பேச்சு
தடைகளை தகர்த்தெறியும் – புது
தரணியே என் நோக்கு
மகாகவி என்பர்
மாமேதை என்பர்
பாட்டு தலைவன் என்பர்         சிந்துக்கு தந்தை என்பர்                    என் அன்பர்கள் எனை அன்புடன்… உண்மையில் யார் மகாகவி              என் சிந்தையில் நிதம்                      எழும் வினா இது                   பல்லாயிரம் பாடல்கள் எழுதுபவனா? பந்தி பந்தியாய் செய்யுள் வரைபவனா?

இல்லை…

எவனொருவனது எழுத்துக்கள்
உன்னை சிந்திக்க வைக்கின்றதோ
எவனொருவனது எழுத்துக்கள் – உன்
உணர்வுகளை உரசிப்பார்கின்றதோ
எவனொருவனது எழுத்துக்கள்
உன்னுடன் தினம் தினம் விவாதிக்கின்றதோ
அவனே மகாகவி!
அளவுகள் அல்ல – உள்
அடக்கமே கவிதையின் நயம்
என்னில் இருக்கும் மகாகவி உன்னிலும் இருக்கின்றான் -அவனை
ஆராய்ந்து வெளிக்கொணர் – புது
அடையாளம் நீ பெறுவாய்!

எழுத்தை வென்ற ஆயுதம்
எதுவுமில்லை உலகிலே
தேடி பலதும் கல்
இயன்றது எழுது
இன்புற்று இயங்கு
உனக்குள் விவாதி
உன்னதம் பிறக்கும்
எழுது எழுது எழுதிக்கொண்டேயிரு
எழுதியே எழுந்து வா!
எழுத்துக்களால் ஏழை
மனங்களை பசியாற்று
இப்போது நீயும் ஓர் மகாகவியே !!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments