நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராது
கண்ணம்மா
என் காதலை
நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன்
நீ சொல் என் கண்ணம்மா
அன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று
வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறது
மீளவும் வருவேன் என
நாடோடிப்பறவை சொல்லி நகர்கிறது
எந்த வருடம் எந்த மாதம் எந்த நாள் என குருவிக்குத் தெரியாது
அடுத்த வசந்தம் அடுத்த இலையுதிர்காலம்
அடுத்த பனிப்பருவம் என ஏதோ ஒரு சமயத்தில சந்திக்கலாம் சந்திக்காமலும் போகலாம்
வாழ்க்கை போடும் கணக்கு வருவிகளுக்கு மட்டும் விலக்கா என்ன
நீங்குதலின் பொருட்டு சேர்தலும்
பிரிதலின் பொருட்டு தேடிக்கூடலும்
யார் போடும் கணக்கடி கண்ணம்மா?
சப்தமிடும் அலைகளாய்
அள்ளிஎறிந்த அமாவாசை இருட்டாய்
மனதுக்குள் தீராத குழப்பங்கள்
தீராமலே இருக்க
இந் நெற்றி முத்தத்தில் சொல்லப்படும்
காதலின் சாயைதான் என்னடி என் கண்ணம்மா?
Superb…