♥காத்திருப்பே காதலாகி
காதலே காத்திருப்பாகி
காத்திருப்பது சுகம் தான்
காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே
தொலைவில் எட்டி நின்றேனும் உன்
பிள்ளை முக வடிவழகை
மனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடு
வழியெங்கும் விழி பதித்துக்
காத்திருக்கிறேன் காதலனே
குறுஞ்செய்திகளை படிக்கையில்
நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன் வசியக்குரல்
செவியோடு நுழைந்து நெஞ்சோடு
கலப்பது எப்போது என
காத்திருக்கிறேன் காதலனே
நினைவெல்லாம் நீயேயாக
கனவுகள் உனக்கென்றேயாக
நிஜமாய் உன் தோள்சாயும்
நேரம் வர வேண்டும்
காத்திருக்கிறேன் காதலனே
காதல் ஒருவனைக் கரம் பிடித்தே
அவன் காரியம் யாவினும்
கை கொடுத்து மாதரறங்கள்
செய்திட வாய்க்கும் மணநாளுக்காய்
காத்திருக்கிறேன் காதலனே
இடைவிடாத செல்லச் சண்டைகள்
எப்போதும் நினைவில் இனிக்கும்
அடுத்து வரும் சமாதானம் அதற்காய்
இதயம் தப்பி தாளம் பிடிக்கும் அப்போதும்
காத்திருக்கிறேன் காதலனே
உன் நினைவுகள் விழுங்கி
ஏப்பமிட்டுக் கொண்டிருக்கும் என் நிகழ்காலத்திற்கு காதலென்று பெயர்
உனக்காய் காத்திருப்பது ஓர் சுகமே
காத்திருக்கிறேன் காதலனே































Superb one❤️💯