மதியின் கலங்கம்

0
709
IMG_20200601_203921_701

நேரம் ஓடியது
வானும் மங்கியது
தன்னை யாரும்
ரசிக்கவில்லை என
கோபம் கொள்ளவில்லை
தன் அழகை மறைக்கவில்லை

வயதும் தேய்ந்து கொண்டே
இளமை எட்டிப்பார்த்தது
இளம் மாதும் அதன் அழகை கண்டு
வியந்து வானம் பார்த்தாள்
நிலவின் ஒளியில்

அதன் கலங்கம் மறைந்து
தெளிந்த அழகு நிலவு
முகிலின் நடுவே
ஏறிப்பார்த்தது

ரசிக்கும் உள்ளத்திற்கு
நிலவின் கலங்கமும்
ஒரு அழகு தான்
மனதில் குறையிருந்தால்
நிலவின் அழகும் கலங்கமே….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments