மீண்டும் வராதா அந்த நாட்கள்……

0
1676
20210614_191946-41a427c7

1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே “கொரோனா”.

பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே;

பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே.

மீண்டும் வராதா அந்த நாட்கள்?

2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,

உறக்கத்தை முடித்துக்கொண்டு எழுந்து பல்துலக்கி முகம்கழுவி,

நீராடி பாடசாலைச்சீருடை அணிந்துகொண்டு,

அம்மா ஆக்கிவைத்த அறுசுவை உணவை விரும்பி உண்டு,

மிதிவண்டியில் பாடசாலைக்குச்செல்வேன்.

3.பாடசாலை சென்றதும் அங்கே ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும்,

புன்னகை ததும்பும் முகத்தோடு காலைவணக்கம் கூறி,

நண்பர்களோடுசேர்வகுப்பறையை சுத்தப்படுத்தி நேர்த்தியாய் தளபாடங்களை அடுக்கி,

இறைஆராதனைக்கு தயாராய் நிற்பேன்.

ஆராதனையில் அன்றையநாள் நன்றாக அமைய வேண்டும் என வேண்டிக்கொள்வேன்.

4.ஆராதனையைமுடித்தபின் பாடங்களுக்கு தயாராவேன்.

ஆசிரியர் கூறும் ஒவ்வொன்றையும் நுணுக்கமாய் கவனித்து,

அவர்கேட்கும் கேள்விகளுக்கு ஆழமாய் சிந்தித்து விடைசொல்லி,

புரியாத விடயங்கள தயங்காமல்கேட்டு தெளிவுற்று,

அன்றைய பாடங்களை நன்றாய் மனதில் படியவைப்பேன்.

5.முதல் நான்கு பாடங்கள் முடிந்தாலே ஓர் ஆனந்தம்.

அதுவே உணவு உண்ணும்வேளை.

நானும் நண்பர்களும் எங்களது உணவுகளை பகிர்ந்தளித்து உண்போம்.

உணவுவேளையை முடித்துக்கொண்டு மிகுதிப்பாடங்களை கற்பேன்.

6.ஆசிரியர் வராத நாட்கள் என்றால்,

நண்பர்களுடன் சேர்ந்து படிப்பேன்.

புரியாத விடயங்களை கேட்டுத்தீர்த்துக்கொள்வேன்.

நண்பர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்த்து வைப்பேன்.

சில சமயங்களில் சிறு விளையாட்டுக்களை நண்பர்களுடன் விளையாடுவேன்.

விளையாட்டு என்றாலே ஒரு தனிசந்தோஷம்.

நண்பர்களுடன் சேர்ந்திருப்பதில் எனக்கு மிக்க ஆனந்தம்

7.பாடசாலை முடியும் நேரத்தில் கொப்பி புத்தகங்களை புத்தகப்பையில் அடுக்கி,

பாடசாலைக்கீதத்திற்கு தயாராகி நிற்பேன்.

கீதம் முடிந்தபின் நண்பர்களுக்கு விடைகூறி,

மறுநாள் பள்ளிநாளை எதிர்பார்த்தபடி வீடு திரும்புவேன்.

8.இக்காலம் எப்போது மீண்டும் வரும்?

எப்போது பள்ளி செல்வேன்?

இணையவழிக்கல்வி இடம்பெற்றாலும் பாடசாலைக்கு சென்று கற்பது போல் ஆகிடுமா?

வெறுக்கிறது பயணத்தடைக்காலங்கள்-மனம்

துடிக்கிறது மீண்டும் பள்ளிக்குச்செல்ல..

இப்படிக்கு

கி.சந்திரசேகர்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments