மெளனியாக பிறந்திருக்கலாம்
மெளன மொழி போதுமே
நீ வேறு நான் வேறு எனும்
பேதம் இருவருக்கும் இல்லை
பேசிக் கொள்ளும் காதலை விட
மெளனியின் காதல்
ஏனோ அத்தனை
அழகாய் தெரிந்தது…
வாய் மொழி போர் இல்லை
வார்த்தைகளுக்கு அர்த்தமும் இல்லை
இருவரும் ஒரு வழி
இருவருக்கும் ஒரே புரிதல்…
மொழியை பரிமாறிக் கொள்வதோ
மொத்தத்திலும் அழகு
நேர் கொண்ட பார்வையோடு
நேர்த்தியான சைகை மொழி மட்டுமே
மெளனியின் காதலை
பார்க்கும் போது தான்
புரிந்து கொண்டேன்
மெளனம் எதிலும் அழகென…