யாரைத்தான் நம்புவது?

0
931
20200526_073656

நம்பிக்கைதான் வாழ்வெனிலும்
நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதை
சுற்றம் தானே என சற்றும் எண்ணாதே
சூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா……

அடிமேல் அடிபட்டாலும் – அன்பால்
அடிபணிந்து இருப்பதனால்

அரவணைக்கும் கரங்கள் கூட
அடிமை என அசட்டாய் எண்ணுதப்பா……..

சங்கடங்கள் வேண்டாமென்று
சகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்
சட்டென்று சஞ்சலங்கள் வந்திங்கு
சத்தியமும் சரிந்து வீழ்ந்ததப்பா………

சொத்துக்கள் உன்னிடத்தில் இல்லையெனில்
சொந்தங்கள் கூட விலகி நிற்கும்
உள்ளம் நோகடித்து உதறித் தள்ளிடுவர்
உடன்பிறந்த உறவெனினும் உரிமை கொள்ளாதேயப்பா……

நேர்வழியில் நேர்த்தியாய் வாழ்வோருக்கு

நேருதே துன்பம் பல வழியில்
ஓரிருவர் செய்யும் செயல்களாலே
ஓரமாய் ஒதுங்கச் சொல்லுதப்பா………

உண்மைக்காதலும் இங்கு இல்லை
உதட்டின் வார்த்தையில் உண்மையில்லை
இத்தனையும் நடக்கையிலே
இவ்வுலகில் யாரைத்தான் நம்புவது???????????

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments