என் காயத்தை வருத்தி
வியர்வையால் நீராடி
வயிற்றுப் பசியை போக்க
இரும்பை வடிவமைக்கின்றேன்
காலையில் எழுந்து
இறைவனை வணங்கி
என்னவளின் முகம் தழுவி
தல வேலையை ஆரம்பிக்கின்றேன்
உடல் பலம் கொண்டு
வீர வேந்தன் நாட்டை காக்க
நுண்ணறிவை கொண்டு
வீர வாள் நிர்மானித்தேன்
புவித்தாயுடன் போராடி
பயிர்ச் செய்யும் தெய்வத்திற்கு
அறுவடை முறையே செய்ய
அரிவாளையும் பெற்றெடுத்தேன்
சமூகத்தில் புகழில்லா இறைவா
என் நாமத்திற்கு சிவி வளர்ப்பில்
தகப்பன் போல் அன்னைக்கு
வளம் வழங்கும் நானே நானல்லோ….































Very nice bro….