முதுமையில் தனிமை

33
15690

மெலிந்து சுருங்கிய தேகம்
நரைத்த கேசம்
தள்ளாடும் வயதது
சப்த நாளங்களெல்லாம் அடங்கி
வாழ்ந்து முடித்த ஆன்மா
அநுபவத்தின் உறைவிடமாய்
மூலையில் உறங்கிப் போகிறது
இவைதானோ முதுமையின் கோலம்

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஏகாந்த ஓசையாய்
நிர்மூலமான நிகழ்காலத்தின்
ஆறுதலாய் எஞ்சி நிற்பது
என் மனையாளின் நினைவலைகள்

மோகனப்புன்னகையாள்
நீள் கருங்குழலுடையாள்
மின்னும் மேனியுடையாள்
பொன்னம்மா நீ
என் விழிகளின் விம்பமாய்
நிற்கிறாயடி…
சேலை கட்டிய ஓவியமே
உடன் இருக்கும் வரை
உன் அருமை புரியலையே..

நீயில்லாத என் துன்பம்
நித்தமும் வாட்டுதம்மா
அறுசுவைப் பண்டமதை
விரும்பி நீ பரிமாறுகையிலே
உப்பில்லை என்று
உதறித்தள்ளி சென்றிடுவேன்
வெட்டி வீராப்பும்
வீண் கர்வமும்
கொண்ட என்னை
அந்நாளில் பொறுமையோடு நீயிருந்து
பணிவிடையும் செய்தாயம்மா…

உன் விருப்பப்படி நீ
உண்டதுமில்லை உடுத்ததுமில்லை
உங்கள் விருப்பம் என்று
ஒற்றை மொழியுரைத்து
உன் ஆசைகளை மறைத்திடுவாய்

சினம் கொண்டு நானுன்னை
எடுத்தெறிந்து பேசுகையிலே
எதிர் பேச்சுப் பேசாது
விம்மி விம்மி அழுதிடுவாய்

சிறு தலைவலி கூட
என்னைத் தொடுவதை
விரும்பாத பெண்மையே
இன்று ஆதரவற்ற உன் கணவன்
நோயோடு வாழ்வதைக்காண
விரும்பாத உன் ஆன்மா
மரணத்தைத் தழுவியதோ..

துக்கமாய் நானிருந்த
அந்நாட்களிலே
ஆறுதலாய் அன்பு மொழி பேசி
அகமகிழச் செய்திடுவாய்
கடைசிவரை உடனிருப்பேன்
என்று சத்தியமும் செய்து விட்டு
கடைசி காலத்தில் தனிமையிலே
தவிக்கவிட்டது நியாயமடி
பொன்னம்மா…

முதுமையில் ஆண்மகன்
இழக்கக் கூடாத ஓர் உறவு
தன் மனைவி மட்டுமே
இருக்கும் வரை அவள் அருமை
பல பேருக்குப் புரிவதில்லை
அநுபவம் பேசுகிறது….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
33 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சபீல் ராஜி
சபீல் ராஜி
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உங்கள் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.

Musna Kaleel
Musna Kaleel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வாழ்வியல் நிதர்சனத்தை கவிதையாய் வடித்த உன் எழுத்துப்பணி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

Keep writing ✒✒
Wish You All the Best ❤

Sahana Jifri
Sahana Jifri
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

யதார்த்தங்கள் மிளிரும்
அருமையான வரிகள்……..

Shanas
Shanas
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Amazing lines😍❤️

Mrs. F. S. Z. Husain
Mrs. F. S. Z. Husain
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True lines❤️

Ummu Masharif
Ummu Masharif
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb
Maasha Allah

Mihna Kaleel
Mihna Kaleel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌👌👌👌👌👌
Very beautiful lines
💐💐💐💐💐💐

Subair Fathima
Subair Fathima
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Speechless…..😐😔👍👍

Asna
Asna
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

கவிதைக்குள் வாழ வைக்கும் வரிகள்..

AM.Thilshath Nifla
AM.Thilshath Nifla
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

முதுமை நிலையில் ஒரு ஆணுக்கு மனைவி என்ற உறவு எவ்வளவு முக்கியம் என்பதை இலக்கிய நயம்பட சுட்டிக்காட்டி….ஆண் மகனின் தனிமை நிலையை செவ்வனெ வெளிப்படுத்திய அழகான கவிதை வரிகள்……

எஸ். பாயிஸா அலி
எஸ். பாயிஸா அலி
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

என்னவொரு உணர்வு வெளிப்பாடு.
வலிக்கும் வரிகள்

Hasma Ibthisa
Hasma Ibthisa
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wow…amazing lines

Abdul Saththar Mohammed Risver
Abdul Saththar Mohammed Risver
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Supperb… very nice

Roslin simra
Roslin simra
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

கவி வரிகளால் கவர்நதிழுக்கும் மாய சக்தியை உன் மொழிநடையில் கண்டேன்.

Musna Kaleel
Musna Kaleel
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அழகிய கவி
ஆத்மார்த்தமான வார்த்தைகள்
தொடர்ந்து எழுத
தோழி இவளின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤❤

umaira
umaira
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice lines…. I like it

Habrath
Habrath
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice d go ahead….

Nazmiya
Nazmiya
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Arumaiyaa varihal

Nazmiya
Nazmiya
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

Nazmiya
Nazmiya
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Varihal kan kalanga veikiranthu

Atheefa
Atheefa
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

முதுமையின் ஏக்கத்தை உன் கவியில் கண்டு மெய் சிலிர்க்கிறேன்…

Juhi
Juhi
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமை… உன் வரிகளால் கலங்குது என் கண்கள்.

Fathima shanika
Fathima shanika
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super

Safna
Safna
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மேலும் பல கவி படைக்க வாழ்த்துக்கள் Noufa….

Nazmila
Nazmila
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வரிகளால் கலங்க வைக்கும் உன் எழுத்துக்கள்…. வாழ்த்துக்கள்

Vithushana
Vithushana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Supperb….

Salman
Salman
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice

Sirajudeen
Sirajudeen
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb

Mohamed Salman
Mohamed Salman
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True lines… Keep going sister

Sirajudeen
Sirajudeen
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Masha allah..

Ahamad
Ahamad
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வாசிப்போரைக் கவரும் மொழிநடை… அனைவருகுகம் விளங்கும் வகையில் சிறப்புற கவி வடிவமைத்துள்ளீர்… வாழ்த்துக்கள்

Irfan Banna
Irfan Banna
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

atputhamana urai nadai thodarhtu unkalai seer paduthunkal vaalthukkal
 

Fathani
Fathani
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

really superb👌👌👌👌