அக்கரையைத் தேடி…

0
924
20200526_002221

பாலூட்டி அன்னை வளர்த்திட
பாடாய்த் தந்தை உழைத்திட
பாற்சாேறு உண்டு மகிழ்ந்து
பாசம் அள்ளி வழங்கிடினும்
பட்டம் புகழ் பெற்றதுமே
பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே…….


இல்லறம் இனிதே வாழ
இக்கரை விரும்பி வாழ்வாேம்
நித்தமும் அலைந்திடுவாேம்
நிம்மதி தேடி அங்கே
கனவுகள் பல இருந்திடினும்
கடன் அக்கரையைத் தேட வைக்குதிங்கே………

ஆடம்பர வாழ்வு வாழவென்று
ஆறுயிர் உறவுகளும் மறந்து நின்று
சினம் சிக்கலைக் கூட்டி விட
சலிப்பு சஞ்சலம் கூடி வர
ஆயிரம் எண்ணம் அலைபாய
ஆசை அக்கரையைத் தேட வைக்குதிங்கே….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments