உயிருக்குள் ஒரு சலனம்

0
1123
images (1)

நேற்றைய நாள்  நன்றாக முடிந்து விட்டது என்று சந்தோசத்துடன் நித்திரைக்கு சென்றான் சாந்தன். மறுநாள் காலை உற்சாகத்துடனும் புன்னகையுடனும் எழும்பியவன் வீட்டில் ஒரே சத்தம் என்று தன் அறையினை விட்டு முன்  ஹோலுக்கு சென்று பார்த்தவன்  ஏதோ பிரச்சனை என்று அறிந்து காரணம் தெரியாமல் யோசித்தவாறே தன் அம்மாவிடம் சென்று “என்னம்மா ஏதும் பிரச்சினையா”? என்று கேட்க அம்மா பதிலுரைக்காததால் மீண்டும் மீண்டும் கேட்கிறான் . ஒருதுளி வார்த்தை கூட வரவில்லை.

“ஐயோ! அம்மா பேசலாமே! ஏன் பேசாம நிக்கிறிங்க”  பதிலோ மெளனம்.

இதற்கு மேல பேசினா எனக்குதான் அவமானம் என்று குளிக்க செல்லும் போது “சீக்கிரம் குளித்து விட்டு வா” என்ற அம்மாவின் குரல் பதிலுக்கு ம்ம்ம்.குளிக்கும் போது பலவித எண்ணவோட்டங்கள் . குளித்துவிட்டு வரும் போது “சீக்கிரம்  என்றார் அம்மா… தன் வேலைகளை முடித்து விட்டு மௌனமாக சென்று அம்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.   அன்று சாந்தனின் வீட்டிற்கு சாந்தனின் அண்ணன், அண்ணி, பிள்ளைகள் எல்லோரும் வந்திருந்தனர். சாந்தனின் அண்ணா சாந்தனை உற்று பார்தபடியே ,

“சாந்தன்………”

” சொல்லுங்க அண்ணா”


“உண்மையை சொல்ல வேண்டும். சரியா?  ….. என்று ஏதோ சொல்ல விளைந்தவர்…. முகத்தில் சற்று கோபத்தோடு கண்கள் சிவந்தும் இருந்தது. பேசத்தொடங்கினார்.

“உண்னை நம்பியதற்கு இது எனக்கு வேண்டும் தான். அப்போதே ஊருல இருக்குறவங்க என் தம்பியை நம்பாத எங்களோட சொல்லாம கொள்ளாம ஓடிருவான் என்டு. நான் தான் உன்ன நம்புனன். இப்ப பாரு……”

“என்ன அண்ணா சொல்லிறீங்க. என்னாச்சு?”

“ஓ.. உனக்கு தெரியாது என்ன?”

“அண்ணா கோபமா இருக்கிறிங்க பிறகு கதைங்கோ” என்டு விலகி சென்றான் சாந்தன்.

“நில்”

“அண்ணா .. இந்த ஊராக்கள் கதை  இல்லாம கதைக்கிறாங்க , கொரோனா டைம் வேற……”

“அப்படியா?”

“ம்ம்ம்”

“உன்ன படிக்க அனுப்புனா பொண்ணு பார்த்து திரியுறா என்ன..படிச்சது போதும் இனி யுனிவர்சிட்டிக்கு போகாத! சரியா?”

“அண்ணா…” என்று கண்களில் கண்ணீர் வழிய  சொன்னான். அதற்கு

“எதுவும் சொல்லாதடா. உங்க அண்ணா எவ்வளவோ கணவு கண்டாரு… இப்பிடி பண்னிட்டியே ஒரு வார்த்த கூட நீயே வந்து சொன்னயா!” என்று சாந்தனின் அண்ணி சொல்ல , சாந்தன் திருதிரு என்று முழித்துக் கொண்டான்.

சாந்தன் வீட்டில் கடைசி பிள்ளையாவான். அவனுக்கு ஐந்து அண்ணாக்கள். அவர்களால் யுனிவர்சிர்ட்டிக்கு போக முடியாத நிலையில் தன் தம்பியை கஷ்ரப்பட்டு படிக்க வைத்தனர். அதன் ஆதங்கம் தான் இது. யாரில் குறை சொல்வது. காதலிப்பது பிழை என்பதா? காதல் எப்ப வரும் எப்ப போகும் என்று  தெரியாதே!

இத்தனை பிரச்சினைக்கு காரணம்  சாந்தனுடன் அதே யுனிவர்சிட்டியில் படித்த ஆறு பிள்ளைகள்தான்.  சிறுவயதில் அவனுடன் ஒன்றாக படித்தவர்கள் , படிக்கும் போதே பொறாமை. இப்போது அவன் ஹப்பியாக இருப்பது  பிடிக்கவில்லை போலும். அதுகளுக்கு ஏற்றால் போல் சாந்தனின் அண்ணியும், தன் ஊர்பிள்ளைகள் என்பதால் சாந்தனைப் பற்றி விசாரிப்பதில் குறிக்கோளாக கொண்டிருந்தார். இதன் விளைவின் விஷ்பரூபமே இப்பிரச்சினை.

ஊரடங்கு நேரம் என்பதால் சாந்தனால் வேறு இடம் செல்ல முடியவில்லை. “என்னடா வாழ்க்கை”  என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.  வீட்டில் சாந்தனின் லவ்  கதையினை விடுவதாயில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் திடிரென்று காலையில் சாந்தனின் அண்ணா வந்து ”  எல்லாவற்றையும் மறந்துவிட்டு தான் சொல்பவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ” என்றார். வேறு வழியின்று சாந்தனும் ஆம் என்று தலையசைத்தான்.


இது பற்றி தன் காதலியிடம் தெரிவித்தேயாக வேண்டும் என்று தன் போனிலிந்து மெசேஜ் அனுப்பினான். “எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பாக்குறாங்க , என்ன செய்யிற என்று தெரியல …” பதிலுக்காக காத்திருக்குறான். சிறிது நேரத்திற்கு பிறகு அவன் காதலியிடமிருந்து மெசேஜ் வந்தது. “ஓ… நல்ல விசியம், நீ அந்த பிள்ளையை கட்டிக்கோ. நான் எனி உன்ன கட்டிக்க மாட்டன். என்று பதில் இருந்தது. அவனுக்கு தலை சுற்றியது, இ்தனை காலமும் யாரை உண்மையாக நேசித்தானோ, அவள்தான் தன் உலகம் என்று எண்ணினானோ அவளே தன்னிடம் இவ்வாறு சொல்லிவிட்டாளே என்று அழுதான். “என்னதான் அழுதாளும் உண்மையில்லாத உறவில் என்ன பயன்”………

அவன் அவளுக்கு ஏசவுமில்லை. மெசேஜ் எதுவும் அனுப்பவுமில்லை.  ஆனால் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மெசேஜ் வந்தது.”எனக்கும் என் வீட்டுல மாப்பிள்ள பாக்குறாங்க, நான் அவரையே கல்யாணம் பண்ணிக்க போறன்” என்று… அவனோ இத்தனை காலமும் தான் முட்டாளாக இருந்திருக்குறோமே என்று கவலைப்பட்டான். அன்றைய நாள் சாந்தனுக்கு அழுகையோட முடிந்தது. அடுத்த நாள் காலையில சாந்தனின் மூத்த அண்ணா, குடும்பத்தோடு எல்லோரும் பெண் பார்க சென்று, பார்த்துவிட்டு சாந்தனிடம் பெண்ணின் நம்பர் கொடுத்து பேசுமாறும் பழகுமாறும் சொல்லி விட்டு சென்றனர்.  ஆனால், அவனின் அண்ணியோ பழையதை மனதில் வைத்து  சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் சாந்தனை காயப்படுத்தி கொண்டிருந்தார்.


தன் அண்ணன் நம்பரை கொடுத்து சில அட்வைஸ்யையும்  சொல்லிவிட்டு போக தன் ஒன்றுவிட்ட சகோதரியை பார்க்க சென்றான். ஒன்றுவிட்ட சகோதரியிடம் தன் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். சாந்தன் காதலித்த விடயம் கூட அவளுக்கு தெரியும்.
“அக்கா!”

“சொல்லு சாந்தன், என்னப்பா?” என கேட்டாள்..                                                                                                            அதற்கு, “பெண் பார்த்து போன் நம்பர் தந்திருக்காங்க, கதைக்கட்டாம் என்று.. என்னால முடியலக்கா  அவள என்னால மறக்க முடியல…என்ன செய்றது ”  என்று சாந்தன் சொல்ல

“டேய் லூசாடா…. அவளே வேணாம் என்டு வேறொருத்தன கல்யாணம் பண்ணபாக்குறாள். இன்னும் அவள நிணைச்சிட்டு .. இப்ப பார்த்த பிள்ளையோட பேசு, எல்லாம் நல்லா நடக்கும் கண்டதெல்லாம் நிணைச்சு குழம்பாத” என்றாள் சாந்தனின் அக்கா.

என்னதான் எல்லோரும் சமாதானம் சொன்னாலும் சாந்தனால் தன் காதலியை மறக்க முடியவில்லை. அவள் டைம்பாஸ்க்கு பேசினாலும் அவன் உண்மையாகவே காதலிச்சான். இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் நம்பர் எடுத்து தன் வீட்டாக்கள் பார்த்த பெண்னுக்கு போன் செய்தான். முதல் தடவை என்பதால் ஏனோதானோ என பேசியவன் போக போக அவளுடன் மனதளவில் உண்மையாகவே நேசித்தான்.  அவ்வாறு கொஞ்ச காலம் செல்ல, அன்று ஒரு மாலை நேரம் அவளுடன் போன் பேசும் போது சாந்தனின் ஊர் ஆன்டி வீட்டிற்கு வந்தார். அந்த நேரம் சாந்தன் போன் பேசி கொண்டிருந்ததால் “என்னடா தம்பி ஒரே போன் பேசுறாய்” என்றார்.

“இல்ல ஆன்டி கூட்டாளிப் பெடியனோடதான் கதைக்குறேன் ” என்றான்.  என்ன உலகம், எல்லாத்தையுமே தப்பாவே பார்க்கிறது. தன்வீட்டில் நடந்தால் மறைந்து விட்டு அடுத்தவர் வீட்டை உளவு பார்பதா? இப்படி இருந்தால் சமூதாயம் என்னாகும்! யாரிடம் கேட்பது?  எல்லாப் பிரச்சினையும் நல்லதற்கே! இப்படி ஒரு பிரச்சினை வராவிட்டால் கடைசி வரையும் நான் அவளை நம்பி ஏமாந்திருப்பனே, என்று முதல் காதலி பொய்யாக பழகியிருக்காள் என்பதும் இதனாலேயே தெரிய வந்தது என்று மனதிற்குள் நிணைத்துக் கொண்டான்.

இரண்டு வாரம் கழித்து……………………………………..,

சாந்தனுக்கு திருமணம் நடந்தது. கொரோணா காலம் என்பதால் அதிக ஆடம்பரம் இல்லாமலும் அதிக மக்கள் கூட்டம் இல்லாமலும் பாதுகாப்பாக நடைபெற்றது. சாந்தன் சந்தோசமாக வாழ்ந்தான். இருப்பினும் இதற்கு முன் பிரச்சினை தொடங்கி கல்யாணம் வரை ஒரே நச்சரிப்பு, செய்த பிழையை சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தனர். பிழை செய்வது மனிதனின் இயல்பு. அதனை திருத்தி கொண்ட பிறகு நம்ப வேண்டும் அல்லவா! கொரோணாவினால் பல வீட்டில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டு சாந்தனை போல நிம்மதியற்று இருந்திருக்க கூடும். ” நாம் யார் மனதையும் காயப்படுத்தாமல் விட்டுக்கொடுத்து பழக வேண்டும். அத்தோடு பிழை செய்தவர் தன்னை திருத்தி கொள்ளும் போது அதை மறுபடியும் மறுபடியும் சுட்டிக் காட்டாமல் இருக்க வேண்டும்.” அப்போதுதான் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments