காந்தையர் இதழ் 2021

0
696

படைப்பாளர்களே, எழுத்தாளர்களே,

வரும் மார்ச் 08இனை சிறப்பிப்பதை முன்னிட்டு நீர்மை வலைத்தளத்தின் குறுங்கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்படவுள்ளன. இதில் உங்கள் கவிதைகளும் இடம்பிடிக்க விரும்பினால் உங்களது குறுங்கவிதைகளை 05-10 வரிகளுக்குட்பட்டதாக எமக்கு பொருத்தமான படத்துடன் உங்களது பிரசுரிக்க வேண்டிய பெயர் மற்றும் உங்கள் புகைப்படம் (விரும்பினால் மாத்திரம். கட்டாயமல்ல) ஆகியவற்றுடன் contact@neermai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இப்போதே அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் விடயம் பெண்மையைப் போற்றுவோம் என குறிப்பிட்டிருத்தல் அவசியம். ஒருவர் அதிகபட்சம் 05 கவிதைகளை பகிர்ந்துகொள்ள முடியும். கவிதைகள் எம்மை அடைய வேண்டிய இறுதித்திகதி 05.03.2021 கவிதையின் பாடுபொருள் பெண்கள் / பெண்மை பற்றியதாகும்.


குறிப்பு: கவிதை தவிர்த்து பெண்கள் / பெண்மை பற்றிய பிற ஆக்கங்களை (கட்டுரை, கதை, நாவல் மற்றும் காணொளிகள்) சமர்ப்பிக்க விரும்பும் நபர்கள் எமது மின்னஞ்சலுக்கு பெண்மையைப் போற்றுவோம்- பிற ஆக்கங்கள் என மின்னஞ்சல் விடயமாக குறிப்பிட்டு தனது விபரங்களுடன் அனுப்பி வைக்கமுடியும். மேலதிக தகவல்கள் அறிய விரும்பின் +94762660466 என்ற இலக்கத்தில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எம்மை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

இது தவிர்த்து எழுத்தாளர்கள் அனைவரையும் பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தங்களது படைப்புக்களை விரும்பிய ஆக்க வடிவில் தங்களது எழுத்தாளர் கணக்கின் மூலம் வழமை போன்று சமர்ப்பிக்கும்படி நீர்மைக்குழு கேட்டுக்கொள்கின்றது.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments